Aparna Rao: High-tech art (with a sense of humor)

70,876 views ・ 2011-11-08

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: SRINIVASAN R S Reviewer: J.S. Themozhi
00:15
Hi. Today, I'm going to take you through glimpses
0
15260
2000
ஹாய், இன்று உங்களுக்கு என்னுடைய
00:17
of about eight of my projects,
1
17260
2000
எட்டு படைப்புகளை அறிமுகப் படுத்துகிறேன்.
00:19
done in collaboration with Danish artist Soren Pors.
2
19260
3000
டேனிஷ் கலைஞரான சோரன் போர்சுடன் இணைந்து நான் உருவாக்கிய படைப்புகள் இவை.
00:22
We call ourselves Pors and Rao,
3
22260
2000
நாங்கள் போர்ஸ் மற்றும் ராவ் என்று எங்களை அழைத்துக்கொள்கிறோம்.
00:24
and we live and work in India.
4
24260
2000
மற்றும் நாங்கள் இந்தியாவில் வாழ்கிறோம், பணியாற்றுகிறோம்.
00:26
I'd like to begin with my very first object,
5
26260
3000
நான் என்னுடைய முதல் படைப்பில் இருந்து துவங்க விரும்புகின்றேன்,
00:29
which I call "The Uncle Phone."
6
29260
2000
''மாமா ஃபோன்'' என்று நான் இதை அழைக்கிறேன்.
00:31
And it was inspired by my uncle's peculiar habit
7
31260
3000
என் மாமாவின் விசித்திரமான ஒரு பழக்கம் தான் இந்தப் படைப்பினை உருவாக்க ஊக்கமளித்தது.
00:34
of constantly asking me to do things for him,
8
34260
2000
அவர் எப்போதும் என்னிடம் ஏதாவது வேலை சொல்லிக்கொண்டே இருப்பார்.
00:36
almost like I were an extension of his body --
9
36260
2000
ஏதோ, நான் தான் அவருக்கு கையும் காலும் மாதிரி.
00:38
to turn on the lights or to bring him a glass of water,
10
38260
2000
லைட்டைப் போடு, ஒரு டம்ளர் தண்ணி கொண்டுவா,
00:40
a pack of cigarettes.
11
40260
2000
அந்த சிகரெட் பாக்கெட்ட எடு, இப்படி ஏதாவது வேலை.
00:42
And as I grew up, it became worse and worse,
12
42260
2000
நான் வளரவளர, அது மிகவும் மோசமானது,
00:44
And I started to think of it as a form of control.
13
44260
2000
இதுவும் ஒரு மாதிரி கட்டுப்பாடுதான் என்று நான் நினைக்க ஆரம்பித்தேன்.
00:46
But of course, I could never say anything,
14
46260
2000
ஆனாலும் அது பற்றி என்னால் எதுவும் பேச முடியவில்லை.
00:48
because the uncle is a respected figure
15
48260
2000
ஏனென்றால் மாமா என்பவர்
00:50
in the Indian family.
16
50260
2000
இந்தியக் குடும்பங்களில் மிகவும் மரியாதைக்குரிய ஒருவர்
00:52
And the situation that irked me and mystified me the most
17
52260
3000
என்னை மேலும் வெறுப்பேற்றிய, மிகவும் புதிரான மாமாவின் செய்கை என்னவென்றால்
00:55
was his use of a landline telephone.
18
55260
2000
தொலைபேசியை அவர் பயன்படுத்தும் விதம்.
00:57
He would hold on to the receiver and expect me to dial a number for him.
19
57260
3000
ஒலிபேசியை எடுப்பாரே தவிர எண்களை நான்தான் சுழற்ற வேண்டும் என்று எதிபார்ப்பார்.
01:00
And so as a response and as a gift to my uncle,
20
60260
3000
இதனால், மாமாவுக்கு என்னுடைய பரிசாக,
01:03
I made him "The Uncle Phone."
21
63260
2000
இந்த ''அங்க்கிள் ஃபோனை'' உருவாக்கினேன்.
01:05
It's so long that it requires two people to use it.
22
65260
3000
இது மிகவும் நீளமாக உள்ளதால் பயன்படுத்த இருவர் தேவை.
01:08
It's exactly the way my uncle uses a phone that's designed for one person.
23
68260
4000
அதாவது ஒருவர் மட்டும் உபயோகிக்கும் தொலைபேசியை என் மாமா எவ்வாறு உபயோகித்தரோ அது போலவே வடிவமைக்கப்பட்டது.
01:12
But the problem is that, when I left home and went to college,
24
72260
3000
ஆனால் பாருங்கள், அதன் பிறகு நான் வீட்டை விட்டு கல்லூரி சென்ற போது,
01:15
I started missing his commands.
25
75260
2000
மாமாவின் கட்டளைகள் இல்லாமல் போனது எனக்கு சிரமமாக இருந்தது.
01:17
And so I made him a golden typewriter
26
77260
2000
அதனால் அவருக்காக ஒரு தங்க தட்டச்சை தயாரித்தேன்.
01:19
through which he could dispense his commands
27
79260
2000
அதன் மூலமாக அவர் தன் ஆணைகளை
01:21
to nephews and nieces around the world as an email.
28
81260
3000
உலகெங்கிலும் உள்ள தன் மருமகன்- மருமகள்களுக்கு, மின்னஞ்சலாக அனுப்பலாம்.
01:24
So what he had to do was take a piece of paper, roll it into the carriage,
29
84260
3000
அவர் என்ன செய்ய வேண்டும் என்றால், ஒரு காகிதத்தை எடுத்து காகித தாங்கியில் சுற்றி
01:27
type his email or command and pull the paper out.
30
87260
3000
அவருடைய கட்டளையை தட்டச்சிய பிறகு காகிதத்தை உருவி விட வேண்டும்.
01:30
This device would automatically send the intended person
31
90260
3000
இந்த கருவி தானாகவே தேவையானவருக்கு
01:33
the letter as an email.
32
93260
2000
அந்த கடிதத்தை மின்னஞ்சலாக அனுப்பி விடும்.
01:35
So here you can see, we embedded a lot of electronics
33
95260
3000
இதில் தேவையான பல மின்னணு சாதனங்களைப் பொருத்தியிருப்பதை நீங்களே காணலாம்.
01:38
that understands all of the mechanical actions
34
98260
2000
இவைதான் எல்லா இயந்திரவியல் இயக்கங்களையும் புரிந்துகொண்டு
01:40
and converts it to digital.
35
100260
2000
அவற்றை எண் சமிக்கை வடிவத்திற்கு மாற்றுகின்றன.
01:42
So my uncle is only dealing with a mechanical interface.
36
102260
3000
ஆகவே, என் மாமா கருவியின் இடைமுகப்பை மட்டுமே உபயோகித்தால் போதும்.
01:45
And of course, the object had to be very grand and have a sense of ritualism,
37
105260
3000
அதே சமயம் இந்தக் கருவி பெருமைக்குரியதும், தினசரி உபயோகத்திற்கு உகந்ததாகவும் இருக்கவேண்டும்
01:48
the way my uncle likes it.
38
108260
2000
அப்படி உள்ளதுதான் என் மாமாவிற்கும் பிடிக்கும்.
01:50
The next work is a sound-sensitive installation
39
110260
3000
அடுத்த பொருள், ஒலியை உணர்ந்து செயல்படக்கூடிய ஒரு கருவி.
01:53
that we affectionately call "The Pygmies."
40
113260
3000
அதை நாங்கள் பாசத்துடன் ''பிக்மிக்கள்'' என அழைப்போம்.
01:56
And we wanted to work with a notion of being
41
116260
2000
எங்களது இந்தப் படைப்பின் நோக்கம்,
01:58
surrounded by a tribe of very shy, sensitive and sweet creatures.
42
118260
4000
மிகவும் கூச்ச சுபாவமுள்ள, இனிய குட்டி மனிதர்கள் நம்மை சூழ்ந்திருக்கும் உணர்வைத் தருவது.
02:02
So how it works is we have these panels, which we have on the wall,
43
122260
3000
பாருங்கள்,இது எப்படி வேலை செய்கிறதென்றால், சுவற்றின் மீது இந்த பலகைகள் உள்ளன.
02:05
and behind them, we have these little creatures which hide.
44
125260
3000
அவற்றுக்குப் பின்னால் இந்தக் குட்டி ஜீவன்கள் ஒளிந்திருக்கிறது.
02:08
And as soon as it's silent, they sort of creep out.
45
128260
3000
சுற்றி எல்லாம் நிசப்தமானவுடன் இந்த ஜீவன்கள் கொஞ்சம் எட்டிப் பார்க்கும்.
02:11
And if it's even more silent, they stretch their necks out.
46
131260
2000
மிகவும் நிசப்தமாக இருந்தால் கழுத்தை வெளியே நீட்டும்.
02:13
And at the slightest sound, they hide back again.
47
133260
3000
எங்காவது சிறு சப்தம் கேட்டுவிட்டால், உடனே மீண்டும் ஒளிந்து கொண்டு விடும்.
02:16
So we had these panels on three walls of a room.
48
136260
3000
ஒரு அறையின் மூன்று சுவர்களிலும் இந்தப் பலகைகள் உள்ளன.
02:19
And we had over 500 of these little pygmies hiding behind them.
49
139260
3000
இந்தப் பலகைகளுக்குப் பின்னால் 500க்கும் மேற்பட்ட பிக்மிக்கள் ஒளிந்துள்ளன.
02:22
So this is how it works.
50
142260
2000
பாருங்கள் இப்படித்தான் இது வேலை செய்கிறது.
02:24
This is a video prototype.
51
144260
2000
இது ஒரு முன்மாதிரி வீடியோ படம்.
02:26
So when it's quiet, it's sort of coming out from behind the panels.
52
146260
3000
பாருங்கள் அமைதியாக இருக்கும் போது அவை பலகைக்குப் பின்னிருந்து எட்டிப் பார்க்கின்றன.
02:29
And they hear like humans do, or real creatures do.
53
149260
2000
மனிதர்கள் போல,அல்லது நிஜமான ஜீவன்கள் போல அவை ஒலியை கேட்கின்றன.
02:31
So they get immune to sounds that scare them after awhile.
54
151260
3000
சிறிது நேரத்தில் அவை தங்களை பயமுறுத்திய சப்தங்களுக்கு பழகிவிடுகின்றன.
02:34
And they don't react to background sounds.
55
154260
3000
இனி எங்கிருந்தோ கேட்கும் பின்னணி ஓசைகளால் அவற்றுக்கு பயமில்லை.
02:37
You'll hear a train in moment that they don't react to.
56
157260
3000
சில நொடிகளில் ஒரு ரயில் சத்தம் கேட்கும். ஆனால் அவை பயப்படுவதில்லை.
02:40
(Noise)
57
160260
2000
(இரைச்சல்)
02:42
But they react to foreground sounds. You'll hear that in a second.
58
162260
3000
ஆனால் அருகாமையில் சத்தம் கேட்டால் அவை அஞ்சுகின்றன. அதை இப்போது நீங்கள் பார்க்கலாம்.
02:45
(Whistling)
59
165260
3000
(சீழ்கை ஒலி)
02:50
So we worked very hard
60
170260
2000
நாங்கள் மிகவும் முயன்று வேலை செய்ததால்,
02:52
to make them as lifelike as possible.
61
172260
3000
உயிருள்ளவற்றைப் போல அவற்றை இயங்க வைக்க முடிந்தது.
02:56
So each pygmy has its own behavior, psyche,
62
176260
2000
ஒவ்வொரு பிக்மிக்கும் அதற்கெனத் தனியாக குணம், மனப்பான்மை
02:58
mood swings, personalities and so on.
63
178260
3000
மனநிலை மற்றும் பண்புகளை உருவாக்கினோம்.
03:01
So this is a very early prototype.
64
181260
2000
இது மிகவும் ஆரம்ப நிலையிலுள்ள ஒரு முன்மாதிரி மட்டுமே.
03:03
Of course, it got much better after that.
65
183260
2000
பின்னர் மேலும் இந்தப் பிக்மிக்கள் சிறப்பாகிவிட்டன.
03:05
And we made them react to people,
66
185260
2000
மனிதர்களின் ஓசைக்கு ஏற்றபடி செயல்படவும் அவற்றைப் பழக்கிவிட்டோம்.
03:07
but we found that people were being quite playful and childlike with them.
67
187260
4000
ஆனால் இந்த பிக்மிக்களைப் பார்த்தாலே மக்கள் மிகவும் குழந்தைத் தனமாக, விளையாட்டுத் தனமாக மாறிவிடுகிறார்கள்.
03:11
This is a video installation called "The Missing Person."
68
191260
3000
இந்த வீடியோ அமைப்பிற்கு ''மறையும் மனிதன்'' என்று பெயர்.
03:14
And we were quite intrigued
69
194260
2000
எங்களுக்கு மிகவும் புதிராக இருந்த ஒன்று,
03:16
with playing with the notion of invisibility.
70
196260
2000
கண்ணுக்குப் புலப்படாத தன்மை என்கிற கருத்துடன் விளையாடுகிற விஷயம்தான் அது.
03:18
How would it be possible to experience a sense of invisibility?
71
198260
3000
கண்ணுக்குப் புலப்படாத தன்மையை அனுபவிப்பதை எப்படி சாத்தியமாக்குவது?
03:21
So we worked with a company
72
201260
2000
இதற்காக நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயல் பட்டோம்.
03:23
that specializes in camera surveillance,
73
203260
2000
காமிரா மூலமான கண்காணிப்பில் தேர்ச்சிபெற்ற நிறுவனமது.
03:25
and we asked them to develop a piece of software with us,
74
205260
3000
எங்களுக்காக மென்பொருள் ஒன்றினை தயாரித்துத் தரும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டோம்.
03:28
using a camera
75
208260
2000
கேமராவின் உதவியுடன்
03:30
that could look at people in the room, track them
76
210260
2000
அறையிலுள்ள மனிதர்களைப் பார்க்கவும், அவர்களைத் தொடரவும்
03:32
and replace one person with the background, rendering them invisible.
77
212260
3000
ஒருவரை மட்டும் நீக்கி, அவருக்கு பதிலாக பின்புலப் படத்தை மட்டும் போட்டு, அவரை மறைய செய்ய அந்த மென்பொருள் உதவும்.
03:35
So I'm just going to show you a very early prototype.
78
215260
3000
இதிலும் ரொம்ப ஆரம்பநிலையிலுள்ள ஒரு முன்மாதிரியைத்தான் உங்களுக்குக் காட்டப்போகிறேன்.
03:38
On the right side you can see my colleague Soren,
79
218260
2000
வலப்புறத்தில், என் நண்பர் சோரனை நீங்கள் காணலாம்,
03:40
who's actually in the space.
80
220260
2000
அவர் உண்மையில் அங்கேதான் இருக்கிறார்.
03:42
And on the left side, you'll see the processed video
81
222260
2000
இடப்புறத்தில், மாற்றியமைக்கப்பட்ட வீடியோ படத்தை நீங்கள் பார்க்கலாம்.
03:44
where the camera has made him invisible.
82
224260
3000
அங்கே கேமரா அவரை மறைத்து விடுகிறது.
03:47
Soren enters the room. Pop! He goes invisible.
83
227260
3000
சோரன் அறைக்குள் வருகிறார். உடனே மறைந்தும் விடுகிறார்!!
03:50
And you can see that the camera is tracking him and erasing.
84
230260
3000
பாருங்கள் கேமரா அவரைத் தொடர்ந்தாலும் படத்தில் மறைத்து விடுகிறது.
03:53
It's a very early video,
85
233260
2000
இது மிகவும் ஆரம்பநிலை வீடியோ படம்.
03:55
so we haven't yet dealt with the overlap and all of that,
86
235260
2000
எனவே ஓவர்லேப் போன்ற உத்திகளை பயன்படுத்தவில்லை.
03:57
but that got refined pretty soon, later.
87
237260
3000
ஆனால் பின்னர் விரைவில் அது துல்லியமாக மாறிவிட்டது.
04:00
So how we used it was in a room where we had a camera looking into the space,
88
240260
3000
இதை செயலாக்கிய முறை எப்படி என்றால், ஓர் அறையில் ஒரு கேமரா,வெற்றிடத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறது,
04:03
and we had one monitor, one on each wall.
89
243260
3000
ஒவ்வொரு சுவற்றிலும் ஒரு மானிட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
04:06
And as people walked into the room,
90
246260
2000
மனிதர்கள் அறைக்குள் நுழையும் போது,
04:08
they would see themselves in the monitor, except with one difference:
91
248260
3000
மானிட்டர்திரையில் அவர்கள் தங்களைக் காண்பார்கள், ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் ...
04:11
one person was constantly invisible
92
251260
2000
அவர்களில் ஒருவர் மட்டும் கண்ணுக்கு எப்பொழுதும் புலப்பட மாட்டார்.
04:13
wherever they moved in the room.
93
253260
2000
அறைக்குள் எங்கெல்லாம் நகர்ந்தாலும் புலப்பட மாட்டார்.
04:15
So this is a work called "The Sun Shadow."
94
255260
2000
அடுத்து படைப்பிற்குப் பெயர் ''சூரிய நிழல்''என்பதாகும்.
04:17
And it was almost like a sheet of paper,
95
257260
3000
அது கிட்டத்தட்ட ஒரு காகிதத் தாள் போன்றது,.
04:20
like a cutout of a childlike drawing
96
260260
2000
ஒரு குழந்தை கிறுக்கிய படத்தை காகிதத்திலிருந்து வெட்டியெடுத்தது மாதிரி,
04:22
of an oil spill or a sun.
97
262260
2000
சிந்திய எண்ணெய் அல்லது சூரியன் போன்ற வடிவத்தில் இருக்கும்.
04:24
And from the front, this object appeared to be very strong and robust,
98
264260
3000
முன்னாலிருந்து பார்த்தால் இந்தப் பொருள் திடமான, வலுவான பொருள் போன்று தோன்றும்.
04:27
and from the side, it almost seemed very weak.
99
267260
3000
பக்கவாட்டிலிருந்து பார்த்தால் மிகவும் பலவீனமாக இருக்கும்.
04:30
So people would walking into the room and they'd almost ignore it,
100
270260
3000
அறையில் நுழைபவர்களின் கவனத்தை அது பெரும்பாலும் கவருவதில்லை.
04:33
thinking it was some crap laying around.
101
273260
2000
தரையில் கிடக்கும் குப்பை போன்ற தோற்றமளிக்கும்.
04:35
But as soon as they passed by,
102
275260
2000
ஆனால் அதை அவர்கள் தாண்டிப் போகும்போது....
04:37
it would start to climb up the wall in jerky fashion.
103
277260
2000
ஒரு விதமான குலுக்கலுடன் அது சுவற்றின் மேல் ஏற ஆரம்பிக்கும்.
04:39
And it would get exhausted, and it would collapse every time.
104
279260
3000
பின்னர் சோர்வடைந்து ஒவ்வொரு முறையும் துவண்டு விழும்.
04:42
(Laughter)
105
282260
2000
(சிரிப்பலை)
04:44
So this work
106
284260
2000
இந்தப் படைப்பில்
04:46
is a caricature of an upside-down man.
107
286260
2000
இது தலைகீழான நிற்கும் மனிதனின் கேலிச்சித்திரம் போன்ற வடிவம்.
04:48
His head is so heavy, full of heavy thoughts,
108
288260
2000
ஆழ்ந்த சிந்தனைகள் நிறைந்துள்ளதால் அவனுடைய தலை மிகவும் கனமானது,
04:50
that it's sort of fallen into his hat,
109
290260
2000
அது அவனது தொப்பியையும் நிறைத்துவிட்டது.
04:52
and his body's grown out of him almost like a plant.
110
292260
2000
அவனுடைய உடல் அவனுக்கு வெளியே கிட்டத்தட்ட ஒரு செடி மாதிரி வளர்ந்துவிட்டது.
04:54
Well what he does is he moves around
111
294260
2000
நல்லது, அவன் என்ன செய்கிறான் என்றால், இங்குமங்கும் நகர்கிறான்,
04:56
in a very drunken fashion on his head
112
296260
2000
நிறையக் குடித்தவனைப் போல தலையால் நகர்கிறான்.
04:58
in a very unpredictable and extremely slow movement.
113
298260
3000
ஊகிக்க முடியாதவாறு, மிகவும் மெதுவான அசைகிறான்,
05:01
And it's kind of constrained by that circle.
114
301260
3000
அவன் அசைவுகள் அந்த வட்டத்திற்குள் கட்டுப்படுத்தப் பட்டது போலுள்ளது.
05:04
Because if that circle weren't there, and the floor was very even,
115
304260
3000
ஏனென்றால் அந்த வட்டம் இல்லாவிட்டால், தரையும் சமதளமாக இருந்தால்,
05:07
it would start to wander about in the space.
116
307260
2000
அவன் வெற்றிடத்தில் உலாவுவான் .
05:09
And there's no wires.
117
309260
2000
அதில் வயர் கொண்டு இணைக்கப் படவில்லை.
05:11
So I'll just show you an instance --
118
311260
2000
பாருங்கள் இப்பொழுது அது செயல்படுவதை விளக்குகிறேன்
05:13
so when people enter the room, it activates this object.
119
313260
2000
மனிதர்கள் அறைக்குள் நுழைவது இதை இயங்க வைக்கிறது.
05:15
And it very slowly, over a few minutes,
120
315260
2000
மிகவும் மெதுவாக, ஒரு சில நிமிடங்களில்
05:17
sort of painfully goes up,
121
317260
2000
வலி வேதனையில் ஒருவர் எழுவது போல எழும்புகிறது,
05:19
and then it gains momentum
122
319260
2000
பின்னர் அது உத்வேகம் பெற்றுவிடுகிறது.
05:21
and it looks like it's almost about to fall.
123
321260
2000
கிட்டத்தட்ட விழுந்துவிடுவது போல தோற்றமளிக்கிறது.
05:23
And this is an important moment,
124
323260
2000
இது ஒரு முக்கியமான ஒரு தருணம்.
05:25
because we wanted to instill in the viewer
125
325260
2000
ஏனென்றால் இந்தக் கணத்தில்தான் பார்ப்பவர் மனதில் உதவும் மனப்பான்மையை தூண்ட விரும்பினோம்.
05:27
an instinct to almost go and help, or save the subject.
126
327260
2000
தன்னிச்சையாக சென்று, தாங்கிப்பிடித்து உதவ முன்வரும் இயல்பை உருவாக்க விரும்பினோம்.
05:29
But it doesn't really need it,
127
329260
2000
ஆனால் உண்மையில் அதற்கு உதவி தேவையேயில்லை.
05:31
because it, again, sort of manages to pull itself up.
128
331260
3000
ஏனென்றால் அது திரும்பவும் ஒரு மாதிரி தானே சமாளித்து நிமிர்ந்து விடும்.
05:34
So this work was a real technical challenge for us,
129
334260
3000
ஆக, இந்தப் படைப்பு உள்ளபடியே எங்களுக்கு ஒரு தொழில்நுட்ப சவாலாகத்தான் இருந்தது.
05:37
and we worked very hard, like most of our works, over years
130
337260
3000
இதற்காக, எங்களின் இதர படைப்புகளைப் போலவே, ஆண்டுக் கணக்கில் கடுமையாக உழைத்தோம்.
05:40
to get the mechanics right and the equilibrium and the dynamics.
131
340260
3000
தேவையான இயந்திரவியல் அம்சங்களையும், சமநிலை மற்றும் இயக்க முறைகளையும் சரிவரக் கொணர்வது
05:43
And it was very important for us
132
343260
2000
எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது,
05:45
to establish the exact moment that it would fall,
133
345260
3000
சரியாக எந்தக் கணத்தில் அது விழும் என்பதைத் நிர்ணயிக்க,
05:48
because if we made it in a way that it would topple over,
134
348260
3000
ஏனென்றால் கவிழ்ந்துவிடக் கூடியதாக அதை நாங்கள் உருவாக்கியிருந்தால்,
05:51
then it would damage itself,
135
351260
2000
அதுவே சேதமடைந்துவிடும்.
05:53
and if it didn't fall enough, it wouldn't instill that fatalism,
136
353260
3000
அல்லது போதிய அளவிற்கு சாயவில்லை என்றால், விழுந்துவிடும் போன்ற தோற்றத்தைத் தராது.
05:56
or that sense of wanting to go and help it.
137
356260
2000
அதனால் ஓடிச் சென்று உதவும் எண்ணம் வராமல் போகலாம்.
05:58
So I'm going to show you a very quick video
138
358260
2000
அதை உங்களுக்கு விளக்க ஒரு வீடியோ காட்டுகிறேன்.
06:00
where we are doing a test scenario -- it's much faster.
139
360260
2000
அதில் நாங்கள் ஒரு பரிசோதனை செய்கிறோம், அது விரைவில் விளக்கும்
06:02
That's my colleague. He's let it go.
140
362260
2000
அது என் சகா. அவர் அதை ஆட விடுகிறார்.
06:04
Now he's getting nervous, so he's going to go catch it.
141
364260
2000
பதற்றமடைத்த அவர், அதைப் தாங்கிப் பிடிக்கப் போகிறார்.
06:06
But he doesn't need to,
142
366260
2000
ஆனால் அவர் அப்படி செய்யத் தேவையில்லை.
06:08
because it manages to lift itself up on its own.
143
368260
2000
ஏனென்றால் அது தானாகவே சமாளித்துக்கொண்டு தன்னை நிமிர்த்திக் கொள்கிறது.
06:10
So this is a work that we were very intrigued with,
144
370260
3000
அடுத்து இதோ இதுதான் எங்களை அதிக சோதனைக்குள்ளாக்கிய படைப்பு.
06:13
working with the aesthetic of fur
145
373260
2000
அழகிய மயிரிழையால் உருவாக்கப்பட்டது போன்ற துணியில்,
06:15
embedded with thousands of tiny different sizes
146
375260
3000
குட்டிகுட்டியாய் பல அளவுளில் பதித்த
06:18
of fiber optics, which twinkle like the night sky.
147
378260
3000
கண்ணாடியிழைகள், இரவில் வானில் மின்னும் விண்மீன்கள் போல ஒளிரும்.
06:21
And it's at the scale of the night sky.
148
381260
2000
இரவு வானத்தைப் போன்றே தோற்றமுடையது.
06:23
So we wrapped this around a blob-like form,
149
383260
2000
அதை நாங்கள் ஒரு குமிழ் மாதிரி சுருட்டினோம்,
06:25
which is in the shape of a teddy bear,
150
385260
2000
'டெடி பியர்' கரடிப் பொம்மை போன்ற வடிவத்திற்கு கொண்டுவந்தோம்.
06:27
which was hanging from the ceiling.
151
387260
2000
மேற்கூரையிலிருந்து அதைத் தொங்கவிட்டோம்.
06:29
And the idea was to sort of contrast
152
389260
2000
இதன் உத்தேசம் என்னவென்றால், ஒரு விதமான முரண்பாட்டை உருவாக்குவது.
06:31
something very cold and distant and abstract like the universe
153
391260
3000
இந்தப் பிரபஞ்சம் மாதிரியான, ரொம்பக் குளிர்ச்சியான, தொலைதூரத்திலுள்ள, வடிவமற்ற ஒரு கருத்தை
06:34
into the familiar form of a teddy bear,
154
394260
2000
நமக்கு நன்கு தெரிந்த ஒரு டெடிபியர் வடிவத்தில் கொண்டுவந்து,
06:36
which is very comforting and intimate.
155
396260
2000
நமக்கு பழகிய, மிக நெருக்கமான உணர்வை ஏற்படுத்துவதே அதன் சாரம்.
06:38
And the idea was that at some point
156
398260
2000
இதில் எதிர்பார்ப்பு என்னவெனில், அதை பார்க்கும் போது ஏதோ ஒரு கணத்தில்
06:40
you would stop looking at the form of a teddy bear
157
400260
2000
நீங்கள் டெடிபியரின் வடிவத்தைக் காணாமல்
06:42
and you would almost perceive it to be a hole in the space,
158
402260
3000
கிட்டத்தட்ட, அண்டவெளியில் ஏதோ ஓட்டை விழுந்திருப்பது போல எண்ணத் தொடங்குவீர்கள்.
06:45
and as if you were looking out into the twinkling night sky.
159
405260
3000
நட்சத்திரங்கள் மின்னும் வானத்தைப் பார்ப்பது போலவே உணர்வீர்கள்.
06:49
So this is the last work, and a work in progress,
160
409260
2000
இறுதியான வருவது, நாங்கள் தற்சமயம் உருவாக்கிக் கொண்டிருக்கும் படைப்பான
06:51
and it's called "Space Filler."
161
411260
2000
''வெற்றிடம் நிரப்பி''என்று அழைக்கப்படும் ஸ்பேஸ் ஃபில்லர்.
06:53
Well imagine a small cube that's about this big
162
413260
2000
நல்லது, இதோ இந்த அளவுள்ள ஒரு சிறிய கனச் சதுரத்தை கற்பனை செய்து கொள்ளவும்.
06:55
standing in front of you in the middle of the room,
163
415260
2000
அது உங்கள் முன்னால் இந்த அறையின் மையத்தில் நிற்கிறது.
06:57
and as you approached it, it tried to intimidate you
164
417260
3000
நீங்கள் அதன் அருகே நெருங்கினால், அது உங்களை பயமுறுத்தும் வகையில்
07:00
by growing into a cube
165
420260
2000
வளர்ச்சியடைந்த கனசதுரமாக,
07:02
that's twice its height and [eight] times its volume.
166
422260
3000
முன்பை விட இரண்டு மடங்கு உயரம், எட்டு மடங்கு பெரிதாக அளவில் மாறும்.
07:05
And so this object is constantly expanding and contracting
167
425260
3000
இவ்வாறாக தொடர்ந்து வளர்ந்து கொண்டும் சுருங்கிக் கொண்டும் இருக்கும்.
07:08
to create a dynamic with people moving around it --
168
428260
2000
சுற்றியுள்ள மனிதர்களின் செயலுக்கேற்ப இயங்குகிறது.
07:10
almost like it were trying
169
430260
2000
இவ்வாறு இது செயல் படுவது
07:12
to conceal a secret within its seams or something.
170
432260
2000
தனக்குள் இருக்கும் ஏதோ ஒன்றை மறைக்க முயல்வது போன்ற தோற்றத்தைத் தரும்.
07:14
So we work with a lot of technology,
171
434260
3000
இதெற்கெல்லாம் பலப்பல தொழில்நுட்பங்களை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
07:17
but we don't really love technology,
172
437260
2000
ஆனால் உண்மையில் தொழில்நுட்பத்தின் மேல் எங்களுக்கு ஆர்வம் இல்லை.
07:19
because it gives us a lot of pain in our work over years and years.
173
439260
3000
ஏனென்றால் ஆண்டாண்டுகளாக இந்த வேலையில் நாங்கள் சந்திக்கும் சிரமங்கள் அதிகம்.
07:22
But we use it because we're interested
174
442260
2000
அப்படியிருந்தும் உற்சாகத்துடன்
07:24
in the way that it can help us
175
444260
2000
தொடர்ந்து செய்வதன் காரணம்,
07:26
to express the emotions and behavioral patterns
176
446260
3000
நம் உணர்வுகளையும் நம் நடத்தையின் பாங்குகளை வெளிப்படுத்த
07:29
in these creatures that we create.
177
449260
2000
இந்த படைப்புகள் உதவுகிறது என்பதே.
07:31
And once a creature pops into our minds,
178
451260
2000
இது போன்ற படைப்பு ஒன்றினை உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்றிவிட்டால்,
07:33
it's almost like the process of creation
179
453260
2000
அதை உருவாக்கும் செயலும்தொடங்கி,
07:35
is to discover the way this creature really wants to exist
180
455260
3000
அந்த படைப்பு எப்படி இருக்க விரும்பும் என்பதை கண்டறிந்து,
07:38
and what form it wants to take and what way it wants to move.
181
458260
2000
எந்த வடிவத்தை எடுக்க விரும்புகிறது, எப்படி நகர விரும்பிகிறது என்பதையெல்லாம் செயலுக்கு கொண்டு வரும் படைப்புத் தொழிலாகிறது.
07:40
Thank you.
182
460260
2000
நன்றி.
07:42
(Applause)
183
462260
2000
(கரவொலி)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7