I survived a terrorist attack. Here's what I learned | Gill Hicks

147,125 views ・ 2016-07-18

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Srinivasan G Reviewer: Vijaya Sankar N
00:12
I could never have imagined
0
12965
2542
நான் நினைத்து பார்த்ததில்லை,
19 வயதேயான தற்கொலைப்படைத் தீவிரவாதி ஒருவன்
00:15
that a 19-year-old suicide bomber
1
15531
3952
மிகவும் முக்கியமான பாடம் ஒன்றை எனக்குக் கற்பிப்பான் என்று.
00:19
would actually teach me a valuable lesson.
2
19507
3681
00:24
But he did.
3
24640
1167
ஆனால் அவன் செய்தான்.
00:26
He taught me to never presume anything
4
26640
4619
நமக்கு அறிமுகமில்லாத எவரைப் பற்றியும்
கருத்துகள் ஏதும் கொள்ளக் கூடாது என்று அவன் எனக்கு கற்பித்தான்.
00:31
about anyone you don't know.
5
31283
3140
00:36
On a Thursday morning in July 2005,
6
36414
4129
ஜூலை 2005, ஒரு வியாழக்கிழமை காலை,
00:40
the bomber and I, unknowingly,
7
40567
3058
முன்பின் அறிந்திராத அந்த தீவிரவாதியும் நானும்,
00:43
boarded the same train carriage at the same time,
8
43649
4547
ஒரே ரயில் பெட்டியில் ஒரே நேரத்தில் பயணம் செய்வதற்காக ஏறினோம்,
00:48
standing, apparently, just feet apart.
9
48220
4463
ஒருசில அடிகளேயான இடைவெளியில் நின்று கொண்டிருந்திருப்போம்.
00:54
I didn't see him.
10
54345
1150
அவனை நான் கவனிக்கவில்லை.
00:56
Actually, I didn't see anyone.
11
56185
1791
எவரையுமே நான் கவனிக்கவில்லை.
சுரங்க இரயிலில் நாம் எவரையும் கவனிப்பதில்லையே.
00:58
You know not to look at anyone on the Tube,
12
58000
2587
01:00
but I guess he saw me.
13
60611
3301
ஆனால் அவன் என்னை கவனித்திருப்பான்.
01:04
I guess he looked at all of us,
14
64916
3041
அந்த வெடியை வெடிக்கவைக்கும் பொத்தானை அமுக்கச் செல்கையில்
01:08
as his hand hovered over the detonation switch.
15
68687
4214
எங்கள் அனைவரையும் அவன் கவனித்திருப்பான்.
01:14
I've often wondered: What was he thinking?
16
74439
4445
அவன் என்ன தான் நினைத்துக் கொண்டிருந்தான் என்று அடிக்கடி யோசித்திருக்கிறேன்.
01:18
Especially in those final seconds.
17
78908
3357
குறிப்பாக அந்த கடைசி விநாடிகளில்.
தனிப்பட்ட பகை ஏதும் இதில் இல்லை என்று எனக்குத் தெரியும்.
01:24
I know it wasn't personal.
18
84765
1609
01:26
He didn't set out to kill or maim me, Gill Hicks.
19
86977
4017
அவன் ஜில் ஹிக்ஸ் எனும் இந்தப் பெண்ணைக் கொல்வதற்காகக் கிளம்பவில்லை.
அவனுக்கு என்னைத் தெரிந்திருக்காது.
01:31
I mean -- he didn't know me.
20
91018
1753
01:33
No.
21
93758
1174
வாய்ப்பேயில்லை.
01:35
Instead, he gave me
22
95666
2946
ஆனால் அவன் எனக்கு அளித்தது
01:38
an unwarranted and an unwanted label.
23
98636
4605
சற்றும் பொருத்தமற்ற, தேவையற்றற அடையாளம் ஒன்றினை.
01:44
I had become the enemy.
24
104272
3380
"எதிரி" என்ற அடையாளமே அது.
01:49
To him, I was the "other,"
25
109390
3576
அவனைப் பொறுத்தவரை நான் ஒரு "அன்னியன்,"
01:52
the "them," as opposed to "us."
26
112990
2697
"எங்கள்" மக்களுக்கு எதிரான "அவர்கள்."
01:57
The label "enemy" allowed him to dehumanize us.
27
117581
5274
எங்களை எதிரிகளாகப் பார்த்த அவனால் மனிதர்களாகப் பார்க்க முடியவில்லை.
02:03
It allowed him to push that button.
28
123674
2427
அந்த வெடியின் பொத்தானை அவன் அமுக்கச் செய்தது அதுவே.
02:07
And he wasn't selective.
29
127339
2167
அவன் எவரையும் குறிவைக்கவும் இல்லை.
02:10
Twenty-six precious lives were taken in my carriage alone,
30
130875
5183
பெட்டியிலிருந்த இருபத்தாறுபேர் தம் விலைமதிப்பற்ற உயிரை இழந்தனர்,
நானும் கூட உயிரிழந்திருப்பேன்.
02:17
and I was almost one of them.
31
137042
1928
02:20
In the time it takes to draw a breath,
32
140855
2741
ஒரு உள்மூச்சு எடுக்கும் தருணத்திற்குள்
02:23
we were plunged into a darkness so immense
33
143620
3670
ஒரு கரிய இருள் எங்களை ஆட்கொண்டது
02:27
that it was almost tangible;
34
147314
2382
மிக அடர்த்தியான இருள் அது;
02:29
what I imagine wading through tar might be like.
35
149720
4359
கரிய அடர்ந்த தாரில் நீந்துவது போலிருந்தது.
02:35
We didn't know we were the enemy.
36
155398
2050
நாங்கள் எதிரிகள் என்று நாங்கள் அறியவில்லை.
எங்கள் மட்டில், நாங்கள் வெறும் பயணிகள், ஒருசில நிமிடங்களுக்கு முன்புவரை,
02:38
We were just a bunch of commuters who, minutes earlier,
37
158321
4058
02:42
had followed the Tube etiquette:
38
162403
2484
சுரங்க இரயில் வழக்கங்களை கடைபிடித்த பயணிகள்:
02:44
no direct eye contact,
39
164911
2206
கண்ணோடு கண் நாங்கள் பார்க்கவில்லை,
பேசிக்கொள்ளவில்லை,
02:47
no talking
40
167141
1150
02:48
and absolutely no conversation.
41
168894
2872
எந்த ஒரு உரையாடலும் இல்லவே இல்லை.
02:53
But in the lifting of the darkness,
42
173948
2953
ஆனால், அந்த காரிருள் எங்களை நீங்கியபோது,
02:57
we were reaching out.
43
177776
1625
நாங்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டோம்
ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டோம்.
03:00
We were helping each other.
44
180179
1512
03:02
We were calling out our names,
45
182808
2461
ஒவ்வொருவரும் தம் பெயரை உரக்கக் கூறினோம்,
03:05
a little bit like a roll call,
46
185293
2151
வருகைப் பதிவு உரைப்பது போல,
03:08
waiting for responses.
47
188389
2277
பதில் ஏதும் வருமா என எதிர்பார்த்து உரைத்தோம்.
03:12
"I'm Gill. I'm here.
48
192559
2663
"நான் ஜில், இங்கே உள்ளேன்.
உயிருடன் உள்ளேன்.
03:17
I'm alive.
49
197111
1310
03:20
OK."
50
200279
1189
ஓகே."
03:23
"I'm Gill.
51
203697
1186
"நான் ஜில்.
03:25
Here.
52
205679
1196
இங்கே.
03:28
Alive.
53
208318
1309
உயிருடன் உள்ளேன்.
03:31
OK."
54
211329
1195
ஓகே."
அலிசன் எனும் பெண்ணை அதற்கு முன்பு எனக்குத் தெரியாது.
03:35
I didn't know Alison.
55
215096
2541
03:38
But I listened for her check-ins every few minutes.
56
218399
4242
ஆனால், சில நிமிடங்களுக்கு ஒருமுறை அவள் குரலெழுப்பும்போதும் அதை கவனித்தேன்.
03:43
I didn't know Richard.
57
223340
1618
ரிச்சர்டை எனக்குத் தெரியாது.
03:45
But it mattered to me that he survived.
58
225839
2889
ஆனால் அவர் உயிர்பிழைப்பது எனக்கு முக்கியமாயிருந்தது.
03:50
All I shared with them
59
230752
1794
அவர்களுடன் என்னைப் பற்றி பகிர்ந்துகொண்டதெல்லாம்
03:52
was my first name.
60
232570
1483
என் முதற்பெயர் மட்டுமே.
டிசைன் கவுன்சிலில்
03:55
They didn't know
61
235013
1151
03:56
that I was a head of a department at the Design Council.
62
236188
3523
நான் ஒரு துறைத் தலைவர் என்று அவர்களுக்குத் தெரியாது.
04:01
And here is my beloved briefcase,
63
241185
3557
இதோ, இதுதான் என்னருமை பை,
04:04
also rescued from that morning.
64
244766
2451
அன்று இதுவும் மீட்கப்பட்டது.
04:08
They didn't know that I published architecture and design journals,
65
248479
3966
கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு ஆய்விதழ்களில் நான் எழுதியுள்ளேன் என்று அவர்களுக்குத் தெரியாது,
04:12
that I was a Fellow of the Royal Society of Arts,
66
252469
3316
ராயல் சொசைட்டி ஆஃப் ஆர்ட்ஸில் நான் ஆய்வாளர் என்றும் தெரியாது,
04:15
that I wore black --
67
255809
1465
கருநிற உடைகளை அணிவேன் என்றும் --
04:18
still do --
68
258695
1166
இப்போதும் அணிகிறேன் --
04:20
that I smoked cigarillos.
69
260566
2556
நான் புகைபிடிப்பேன் என்றும் அவர்களுக்குத் தெரியாது.
04:23
I don't smoke cigarillos anymore.
70
263888
2303
இப்போதெல்லாம் நான் புகைபிடிப்பதில்லை.
04:26
I drank gin and I watched TED Talks,
71
266215
4184
ஜின் குடித்து TED உரைகளைப் பார்ப்பேன்,
04:30
of course, never dreaming that one day I would be standing,
72
270423
6206
அப்போது கற்பனையும் செய்ததில்லை, ஒருநாள் இவ்வாறு
04:37
balancing on prosthetic legs,
73
277593
2895
செயற்கைக் கால்களில் நின்றுகொண்டு
உரை நிகழ்த்துவேன் என்று.
04:40
giving a talk.
74
280512
1157
04:42
I was a young Australian woman doing extraordinary things in London.
75
282651
5644
இலண்டன் நகரில் செயற்கரிய காரியங்கள் செய்துகொண்டிருந்த ஆஸ்திரேலிய இளம்பெண் நான்.
04:48
And I wasn't ready for that all to end.
76
288319
2833
அவை எல்லாமே முடிந்துவிடும் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை.
04:52
I was so determined to survive
77
292882
3158
எப்படியாவது பிழைக்கவேண்டும் என்பதில் உறுதியாயிருந்தேன்,
என் கால்களில் மேல்பகுதியச் சுற்றி குருதியடக்கும் கட்டு கட்டினேன்,
04:56
that I used my scarf to tie tourniquets around the tops of my legs,
78
296064
5202
05:01
and I just shut everything and everyone out,
79
301290
5333
வெளியில் எதையும் எவரையும் கவனிக்காமல்
05:07
to focus, to listen to myself,
80
307345
3260
என்னுள்ளே கவனம் செலுத்தினேன்,
05:10
to be guided by instinct alone.
81
310629
3134
என் உள்ளுணர்வால் மட்டுமே வழிநடத்தப்பட்டேன்.
மூச்சு விடும் வேகத்தைக் குறைத்தேன்.
05:15
I lowered my breathing rate.
82
315085
2094
05:17
I elevated my thighs.
83
317847
1780
தொடைகளை உயர்த்தினேன்.
05:19
I held myself upright
84
319651
1668
நிமிர்ந்து நேராக அமர்ந்தேன்,
05:21
and I fought the urge to close my eyes.
85
321343
3670
கண்ணிமைகள் மூடிக்கொள்வதைத் தடுக்கப் போராடினேன்.
05:26
I held on for almost an hour,
86
326681
3332
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தை இப்படியே கடத்தினேன்,
அந்த ஒரு மணி நேரத்தில், அதுவரையிலான என் வாழ்க்கை முழுவதையும்
05:31
an hour to contemplate the whole of my life
87
331030
4381
05:35
up until this point.
88
335435
1796
திரும்பிப் பார்த்தேன்.
05:39
Perhaps I should have done more.
89
339199
3079
அதுவரை நான் செய்தவற்றை விட அதிகமாகச் செய்திருக்கலாம்.
05:43
Perhaps I could have lived more, seen more.
90
343223
3204
அதிகமாக வாழ்ந்திருக்கலாம், அதிக இடங்களைப் பார்த்திருக்கலாம்.
05:46
Maybe I should have gone running, dancing, taken up yoga.
91
346451
4414
ஓட்டப்பயிற்சி செய்திருக்கலாம், நடனமோ யோகமோ பழகியிருக்கலாம்.
05:52
But my priority and my focus was always my work.
92
352317
4938
ஆனால் என் கவனம், குறிக்கோள் எல்லாமே என் பணியிலேயே இருந்தது.
05:57
I lived to work.
93
357279
1901
பணி செய்வதற்காகவே வாழ்ந்தேன்.
05:59
Who I was on my business card
94
359730
2807
தொழிலட்டையில் என் பெயரும் பணிநிலையுமே
06:02
mattered to me.
95
362561
1270
எனக்கு முக்கியமாயிருந்தது.
06:05
But it didn't matter down in that tunnel.
96
365688
3610
ஆனால் அந்தச் சுரங்கத்தினுள் அது முக்கியமாகத் தெரியவில்லை.
06:11
By the time I felt that first touch
97
371226
4470
எங்களை மீட்க வந்த மீட்பாளர் ஒருவரின் கை முதன்முறையாக
06:15
from one of my rescuers,
98
375720
2140
என்னைத் தொடுவதை நான் உணர்ந்த போது,
06:18
I was unable to speak,
99
378472
2117
என்னால் எதுவும் பேச இயலவில்லை,
06:20
unable to say even a small word, like "Gill."
100
380613
4979
"ஜில்" என்ற ஒரு சிறு சொல்லையும் என்னால் சொல்ல இயலவில்லை.
06:27
I surrendered my body to them.
101
387183
2735
என் உடலுடன் முற்றிலுமாக அவர்களிடம் சரணடைந்தேன்.
06:29
I had done all I possibly could,
102
389942
2873
அதுவரை இயன்றதெல்லாம் செய்த நான்
06:32
and now I was in their hands.
103
392839
3696
இப்போது அவர்கள் கையில்.
எனக்கு ஒரு புரிதல் வந்தது,
06:39
I understood
104
399091
1388
06:41
just who and what humanity really is,
105
401283
6198
மனித நேயம் என்றால் உணமையில் யார் என்ன என்று,
06:47
when I first saw the ID tag
106
407972
3199
மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டபோது எனக்கு அளிக்கப்பட்ட
06:51
that was given to me when I was admitted to hospital.
107
411195
3259
அடையாள அட்டையை முதன் முதலில் பார்த்த போது புரிந்தது.
06:54
And it read:
108
414478
1174
அதில் எழுதியிருந்தது:
06:56
"One unknown estimated female."
109
416218
5270
"அடையாளம் காணப்படாத, பெண் எனக் கருதப்படும் ஒருவர்."
அடையாளம் காணப்படாத, பெண் எனக் கருதப்படும் ஒருவர்.
07:03
One unknown estimated female.
110
423162
4215
அவ்வார்த்தைகள் எனக்குக் கிடைத்த பரிசு என நான் கருதுகிறேன்.
07:09
Those four words were my gift.
111
429004
2947
அவ்வார்த்தைகள் எனக்குத் தெளிவாய்ச் சொன்னது இது தான்:
07:13
What they told me very clearly
112
433125
2747
07:15
was that my life was saved,
113
435896
2705
என் வாழ்க்கை காப்பாற்றப்பட்டதற்கு ஒரே காரணம்
07:18
purely because I was a human being.
114
438625
3144
நான் ஒரு மனிதர் என்பது மட்டுமே.
07:22
Difference of any kind made no difference
115
442610
4184
வேறெந்த வேறுபாடுகளும் அங்கே முக்கியமில்லை,
07:26
to the extraordinary lengths that the rescuers were prepared to go
116
446818
4557
மீட்பாளர்கள் மேற்கொண்ட அனைத்து அரிய முயற்சிகளுக்கும்,
என் உயிரைக் காப்பதற்காக,
07:32
to save my life,
117
452129
1540
07:34
to save as many unknowns as they could,
118
454458
2723
முடிந்தளவு அத்தனை உயிர்களையும் காப்பாற்றுவதற்காக
07:37
and putting their own lives at risk.
119
457205
2332
உயிரையும் பணயம் வைத்த அவர்களுக்கு முக்கியமேயில்லை.
07:40
To them, it didn't matter if I was rich or poor,
120
460405
4171
நான் ஏழையா அல்லது வசதி படைத்தவளா என்பது அவர்களுக்கு முக்கியமில்லை,
07:45
the color of my skin,
121
465298
2141
என் தோலின் நிறம் முக்கியமில்லை,
07:47
whether I was male or female,
122
467463
1562
நான் ஆணா அல்லது பெண்ணா,
என் பாலியல் உணர்வுகள் எப்படிப்பட்டவை,
07:49
my sexual orientation,
123
469049
1897
07:51
who I voted for,
124
471613
1603
நான் யாருக்கு வாக்களித்தேன்,
07:53
whether I was educated,
125
473240
1518
நான் கல்வி கற்றவளா,
07:54
if I had a faith or no faith at all.
126
474782
3689
நான் இறை நம்பிக்கை கொண்டவளா அல்லது கொண்டிராதவளா.
07:59
Nothing mattered
127
479409
1944
எதுவுமே அவர்களுக்கு முக்கியமில்லை,
08:01
other than I was a precious human life.
128
481377
4643
நான் ஒரு விலைமதிப்பற்ற மனித உயிர் என்பதனைத் தவிர.
08:07
I see myself as a living fact.
129
487881
3480
நான் இன்று வாழ்வதே இதற்கு சான்று.
08:12
I am proof
130
492223
2029
நிபந்தனையற்ற அன்பும் மதிப்பும்
08:14
that unconditional love and respect can not only save,
131
494276
6728
உயிரைக் காப்பது மட்டுமல்ல, வாழ்வையே மாற்றும் என்பதற்கு
என் அனுபவமே சான்று.
08:21
but it can transform lives.
132
501028
3041
08:25
Here is a wonderful image of one of my rescuers, Andy, and I
133
505226
4468
இதோ, என்னை மீட்டவர்களுள் ஒருவரான ஆண்டியும், நானும்,
08:29
taken just last year.
134
509718
1872
சென்ற வருடம் எடுத்த படம்.
அந்நிகழ்வு நிகழ்ந்து பத்து வருடங்கள் கழித்து
08:32
Ten years after the event,
135
512080
2561
08:34
and here we are, arm in arm.
136
514665
2344
இதோ, நாங்கள் தோளோடு தோள் நிற்கிறோம்.
08:39
Throughout all the chaos,
137
519559
2118
அந்நிகழ்வின்போது, அந்தக் குழப்பமான தருணங்களில்
08:41
my hand was held tightly.
138
521701
2840
என் கை இறுகப் பிடிக்கப்பட்டிருந்தது.
08:45
My face was stroked gently.
139
525200
2873
என் முகம் இதமாக வருடப்பட்டது.
நான் உணர்ந்தது என்ன?
08:49
What did I feel?
140
529161
1412
08:51
I felt loved.
141
531541
1222
நான் உணர்ந்தது அன்பினை.
08:53
What's shielded me from hatred and wanting retribution,
142
533685
4817
பழி தீர்க்கும் எண்ணம் ஏதும் என்னுள் வராமல் பாதுகாத்தது,
08:58
what's given me the courage to say:
143
538526
2989
'இது என்னுடனே முடியட்டும்' என்று
09:01
this ends with me
144
541539
2880
நான் சொல்லுவதற்குத் துணிவைக் கொடுத்தது,
அன்பு மட்டுமே.
09:06
is love.
145
546006
1191
09:08
I was loved.
146
548585
1998
நான் உணர்ந்த அந்த அன்பு.
09:13
I believe the potential for widespread positive change
147
553234
6265
ஆக்கப்பூர்வமான மாற்றங்களை பரவலான முறையில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள்
மாபெரும் அளவில் உள்ளது என்பது என் நம்பிக்கை.
09:19
is absolutely enormous
148
559523
1580
ஏனென்றால், நம்முடைய ஆற்றல் என்ன என்பது எனக்குத் தெரியும்.
09:21
because I know what we're capable of.
149
561127
2904
மனித இனத்தின் சக்தி என்னவென்பதை நான் அறிவேன்.
09:24
I know the brilliance of humanity.
150
564055
3197
09:27
So this leaves me with some pretty big things to ponder
151
567930
3910
என்னுள் பல பெரிய சிந்தனைகளை இது எழுப்புகிறது,
09:31
and some questions for us all to consider:
152
571864
3402
நமக்குள் நாமே கெட்டுக்கொள்ள வேண்டிய சில கேள்விகளையும் எழுப்புகிறது:
09:36
Is what unites us not far greater than what can ever divide?
153
576512
5873
நம்மை இணைக்கும் இந்த ஒற்றுமை நம்மிடையே உள்ள எந்தத வேற்றுமையையும் விட மிகப் பெரியது அல்லவா?
09:43
Does it have to take a tragedy or a disaster
154
583663
3790
ஒரு பேரிடரோ, துன்ப நிகழ்வோ நிகழ்ந்தால் மட்டுமே
09:47
for us to feel deeply connected as one species,
155
587477
4496
நாம் ஒன்றுபடுவோமா? ஒரே இனம் என ஆழமாக உணர்வோமா?
09:52
as human beings?
156
592902
1859
நாம் அனைவரும் மனிதர் என்று உணர்வோமா?
09:55
And when will we embrace the wisdom of our era
157
595755
5206
காலம் உணர்த்தும் அறிவை ஏற்றுக் கொண்டு
10:01
to rise above mere tolerance
158
601764
3370
சகிப்புத்தன்மை எனும் நிலையையும் தாண்டி
10:05
and move to an acceptance
159
605931
2937
நமக்கு அறிமுகமில்லாதவர்களும் மனிதர்களே
10:08
for all who are only a label until we know them?
160
608892
5333
எனும் இந்த ஒற்றுமையை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்வது எப்போது?
10:15
Thank you.
161
615550
1160
நன்றி.
10:16
(Applause)
162
616734
6798
(கரவொலி)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7