The first secret of great design | Tony Fadell

2,084,137 views ・ 2015-06-03

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Rajagopal v Reviewer: Jenisan Kulendiran
00:13
In the great 1980s movie "The Blues Brothers,"
0
13136
3253
1980 களில் "தி ப்ளூ ப்ரதெர்ஸ்" என்ற சினிமாவில் ஒரு காட்சி
00:16
there's a scene where John Belushi goes to visit Dan Aykroyd in his apartment
1
16389
4794
"ஜான் பெலூஷி" என்பவர் தன் நண்பனான டேனின்
00:21
in Chicago for the very first time.
2
21183
2323
சிகாகோ வீட்டிற்கு முதன் முறையாக செல்கிறார்
00:24
It's a cramped, tiny space
3
24106
2531
மிகவும் சிறிய , அடைசலான இடம்
00:26
and it's just three feet away from the train tracks.
4
26637
2531
ரெயில் பாதையிலிருந்து வெறும் மூன்றடி தூரமே
00:30
As John sits on Dan's bed,
5
30628
1838
ஜான், டேனின் படுக்கையில் அமரும்போது
00:32
a train goes rushing by,
6
32466
2463
ஒரு ரெயில் படுவேகமாகச் செல்கிறது
00:34
rattling everything in the room.
7
34929
2224
அறையில் எல்லாமே ஆட்டம் காணுகின்றன
00:37
John asks, "How often does that train go by?"
8
37153
3829
"இந்த ரெயில் எவ்வளவு முறை செல்லும்?" என்று ஜான் கேட்கிறார்.
00:40
Dan replies, "So often, you won't even notice it."
9
40982
4560
"ரொம்ப அடிக்கடி! உனக்கு தெரியவே தெரியாத அளவிற்கு" என ஜான் பதிலளிக்கிறார்
00:45
And then, something falls off the wall.
10
45542
2906
அப்பொழுது சுவற்றிலிருந்து ஏதோ கீழே விழுகிறது.
00:49
We all know what he's talking about.
11
49248
1794
ஜான் சொல்வது நமக்கு தெரிந்த விஷயம்
00:51
As human beings, we get used to everyday things
12
51042
2841
அன்றாட விஷயங்கள் நமக்கு பழகிப் போய்விடுகிறது
00:53
really fast.
13
53883
1197
ரொம்ப வேகமாக.
00:55
As a product designer, it's my job to see those everyday things,
14
55600
3384
ஒரு பொருள் டிஸைனராக என் பணி அந்த அன்றாட விஷயங்களைப் பார்ப்பது.
00:58
to feel them, and try to improve upon them.
15
58984
3537
அவற்றை உணர்ந்து, முடிந்தால் அவைகளை மேம்படுத்துவது
01:03
For example, see this piece of fruit?
16
63365
3496
உதாரணத்திற்கு, இந்த ஆப்பிளைப் பாருங்கள்
01:08
See this little sticker?
17
68211
1600
மேலே உள்ள ஸ்டிக்கர் தெரிகிறதா?
01:11
That sticker wasn't there when I was a kid.
18
71211
2455
நான் சிறுவனாக இருந்த போது இந்த ஸ்டிக்கர் கிடையாது
01:14
But somewhere as the years passed,
19
74776
1918
ஆனால் எப்பொழுதோ காலப் போக்கில்
01:16
someone had the bright idea to put that sticker on the fruit.
20
76694
2881
பழத்தில் இந்த ஸ்டிக்கர் போட வேண்டுமென்று எவருக்கோ தோன்றியது.
01:19
Why?
21
79575
717
ஏன்?
01:20
So it could be easier for us
22
80292
1529
நம் வேலையை சுலபமாக்க.
01:21
to check out at the grocery counter.
23
81821
1737
கடையில் கவுண்டரில் பில் போட.
01:23
Well that's great,
24
83558
1093
நல்ல ஐடியா தான்.
01:24
we can get in and out of the store quickly.
25
84651
2055
கடையிலிருந்து சீக்கிரமே வெளியேறி விடலாம்.
01:26
But now, there's a new problem.
26
86706
2078
ஆனால் இப்பொழுது ஒரு புதிய பிரச்சினை.
01:29
When we get home and we're hungry
27
89414
2029
வீட்டில் நமக்கு பசி வரும்போது
01:31
and we see this ripe, juicy piece of fruit on the counter,
28
91443
3431
சுவையுள்ள அந்தப் பழம் கண்ணில் படும்போது
01:34
we just want to pick it up and eat it.
29
94874
2845
அதை எடுத்து உடனே சாப்பிட விரும்புவோம்.
01:37
Except now, we have to look for this little sticker.
30
97719
3736
ஆனால் பழத்தில் ஸ்டிக்கர் இருக்கிறதே
01:42
And dig at it with our nails, damaging the flesh.
31
102587
4374
அதை நகம் பழத்தில் படாமல் கிள்ளி எடுக்க வேண்டும்.
01:46
Then rolling up that sticker --
32
106962
1639
பிறகு அந்த ஸ்டிக்கரைச் சுருட்டி
01:48
you know what I mean.
33
108601
1035
சொல்வது புரிகிறதல்லவா
01:49
And then trying to flick it off your fingers.
34
109636
2139
விரலில் ஒட்டிய ஸ்டிக்கரை எடுத்தெறிய முயல்வோம்
01:51
(Applause)
35
111775
3361
(கர கோஷம்)
01:56
It's not fun,
36
116276
1500
இது தேவையே இல்லை
01:57
not at all.
37
117776
1021
இல்லவே இல்லை.
01:59
But something interesting happened.
38
119777
1905
ஆனால் சுவாரசியம் என்னவென்றால்
02:01
See the first time you did it, you probably felt those feelings.
39
121992
3081
நீங்கள் இப்படி உணர்ந்தது ஒருகால் முதல் முறையில் மட்டுமே.
02:05
You just wanted to eat the piece of fruit.
40
125075
2205
உங்களுக்கு பழத்தை உடனே தின்ன ஆசை.
02:07
You felt upset.
41
127280
1007
எரிச்சல் வந்தது
02:08
You just wanted to dive in.
42
128287
1734
உடனே எடுத்து கடிக்க விரும்பினீர்கள்
02:10
By the 10th time,
43
130541
1624
ஆனால் பத்து தடவைகளூக்கு பிறகு
02:12
you started to become less upset
44
132165
2476
உங்கள் எரிச்சல் குறைந்தது
02:14
and you just started peeling the label off.
45
134641
3430
அந்த ஸ்டிக்கரை சும்மா உரித்தெடுத்தீர்கள்.
02:18
By the 100th time, at least for me,
46
138071
2409
100வது முறைக்குள், நிச்சயமாக எனக்கு
02:20
I became numb to it.
47
140480
1132
எனக்கு மரத்து விட்டது
02:22
I simply picked up the piece of fruit,
48
142212
2891
நான் சும்மா ஆப்பிளை எடுத்து
02:25
dug at it with my nails, tried to flick it off,
49
145103
4112
நகத்தால் கிள்ளியெடுத்து, அதை சுண்டியெறிய முயலுகிறேன்.
02:29
and then wondered,
50
149215
1556
பிறகு தேடுகிறேன் இன்னொரு
02:30
"Was there another sticker?"
51
150771
3499
ஸ்டிக்கர் இருக்கிறதா என்று?
02:35
So why is that?
52
155680
1294
ஏன் அப்படி?
02:36
Why do we get used to everyday things?
53
156974
2152
அன்றாட விஷயங்கள் ஏன் நமக்கு பழகி விடுகின்றன?
02:39
Well as human beings, we have limited brain power.
54
159126
3148
மனிதர்களாகிய நம் மூளையின் சக்தி ஒரு வரம்பிற்குட்பட்டதே
02:42
And so our brains encode the everyday things we do into habits
55
162274
4769
.நாம் அன்றாடும் செய்யும் விஷயங்களை மூளை பழக்கமாக மாற்றி விடுகிறது
02:47
so we can free up space to learn new things.
56
167043
3577
அதனால் மூளையில் புதிய விஷயங்களுக்கு இடம் கிடைக்கிறது.
02:50
It's a process called habituation
57
170620
2042
இதையே பழக்கம் என்கிறோம்
02:52
and it's one of the most basic ways, as humans, we learn.
58
172662
3604
ஒரு மனிதனாக நாம் கற்றுக் கொள்ளும் அடிப்படை வழிகளில் இது ஒன்று
02:57
Now, habituation isn't always bad.
59
177596
2169
பழக்கம் என்பது ஒரு கெட்ட விஷயமே அல்ல
03:00
Remember learning to drive?
60
180975
1636
காரோட்டக் கற்றது ஞாபகம் இருக்கிறதா?
03:03
I sure do.
61
183101
1178
எனக்கு இருக்கிறது
03:04
Your hands clenched at 10 and 2 on the wheel,
62
184939
3288
உ ங்கள் கைகள் ஸ்டீரிங்கை 10 மற்றும் 2 நிலையில் பிடித்ததை.
03:08
looking at every single object out there --
63
188227
2218
அங்கு தென்பட்ட ஒவ்வொரு பொருளையும் பார்த்ததை
03:10
the cars, the lights, the pedestrians.
64
190445
3250
கார்கள், விளக்குகள், பாதசாரிகள்
03:13
It's a nerve-wracking experience.
65
193695
2311
நரம்புகளை முறுக்கிய அனுபவம் அது
03:16
So much so, that I couldn't even talk to anyone else in the car
66
196936
3584
எப்படியெனில் நான் காரில் உள்ள மற்றவரோடு பேசக் கூட முடியாது
03:20
and I couldn't even listen to music.
67
200520
1930
பாட்டுக் கூட கேட்க முடியாது
03:22
But then something interesting happened.
68
202840
2109
பிறகு சுவாரசியமாக ஒன்று நடந்தது
03:24
As the weeks went by, driving became easier and easier.
69
204949
4170
போகப் போக காரோட்டுவது சுலபமாகி விட்டது
03:30
You habituated it.
70
210339
1308
உங்களுக்கு பழகி விட்டது
03:32
It started to become fun and second nature.
71
212647
2267
ஒரு விளையாட்டாக உங்கள் இயல்பாக ஆகி விட்டது
03:35
And then, you could talk to your friends again
72
215324
2207
உங்கள் நண்பர்களிடம் இப்பொழுது பேச முடிந்தது
03:37
and listen to music.
73
217531
959
பாட்டும் கேட்டீர்கள்
03:38
So there's a good reason why our brains habituate things.
74
218490
2699
ஆக மூளை விஷயங்களைப் பழக்கப் படுத்துவது காரணத்துடன் தான்
03:41
If we didn't, we'd notice every little detail,
75
221189
3363
இல்லையென்றால் நாம் கவனிப்போம் ஒவ்வொரு சிறு விஷயத்தையும்
03:44
all the time.
76
224552
1615
சதா சர்வ காலமும்
03:46
It would be exhausting,
77
226717
1578
அது களைப்பைத் தந்து விடும்
03:48
and we'd have no time to learn about new things.
78
228295
2392
புதியதைக் கற்க நமக்கு நேரமிருக்காது
03:52
But sometimes, habituation isn't good.
79
232317
3140
ஆனால் சில சமயங்களில் பழகிப் போவது நல்லதல்ல
03:56
If it stops us from noticing the problems that are around us,
80
236477
3335
சுற்றியுள்ள பிரச்சினைகளைப் பார்ப்பதிலிருந்து தடுத்து விடுகிறது
03:59
well, that's bad.
81
239812
1031
அது மோசமல்லவா?
04:01
And if it stops us from noticing and fixing those problems,
82
241413
3403
அது பிரச்சினைகளை கவனித்து தீர்வுகள் காண்பதிலிருந்து தடுத்து விடுகிறது
04:04
well, then that's really bad.
83
244816
2117
இது நிச்சயமாக மிகவும் மோசம்
04:07
Comedians know all about this.
84
247923
1983
நகைச்சுவையாளர்களுக்கு இது நன்கு தெரியும்
04:09
Jerry Seinfeld's entire career was built on noticing those little details,
85
249906
4885
ஜெர்ரி ஸீன்ஃபீல்டின் தொழில் இந்தச் சின்ன விஷயங்களைப் பார்ப்பதில் தான் வளர்ந்தது
04:14
those idiotic things we do every day that we don't even remember.
86
254791
3978
நமக்கு நினைவு கூட இல்லாத அன்றாடும் செய்யும் மடத்தனமான செயல்களை.
04:20
He tells us about the time he visited his friends
87
260238
2377
நண்பர்களைக் காணச் சென்றதைப் பற்றிக் கூறுகிறார்.
04:22
and he just wanted to take a comfortable shower.
88
262615
2386
அவர் சும்மா சுகமாகக் குளிக்க விரும்பினார்
04:25
He'd reach out and grab the handle and turn it slightly one way,
89
265001
3897
கையை நீட்டி கைப்பிடியை ஒரு பக்கமாகச் சற்று திருப்பினார்
04:28
and it was 100 degrees too hot.
90
268900
2583
தண்ணீர் 100 டிகிரி சூடாக இருந்தது
04:31
And then he'd turn it the other way, and it was 100 degrees too cold.
91
271483
3932
பிறகு மறு பக்கம் திருப்பினார் 100 டிகிரி குளிர்வாக இருந்தது
04:35
He just wanted a comfortable shower.
92
275415
2363
அவர் சுகமாக குளிக்க நினைத்தார்!
04:37
Now, we've all been there,
93
277778
2163
நம் எல்லோருக்கும் இந்த அனுபவம் உண்டு
04:39
we just don't remember it.
94
279941
1785
ஆனால் அது ஞாபகத்தில் இருப்பதில்லை
04:41
But Jerry did,
95
281726
1322
ஆனால் ஜெர்ரிக்கு இருந்தது
04:43
and that's a comedian's job.
96
283048
2014
அது தான் நகைச்சுவையாளரின் வேலை
04:45
But designers, innovators and entrepreneurs,
97
285062
3120
ஆனால் டிசைனர்கள், நூதனர்கள் மற்றும் முனைவர்களாகிய நாம்
04:48
it's our job to not just notice those things,
98
288182
2407
விஷயங்களைப் பார்த்தால் மட்டும் போதாது
04:50
but to go one step further and try to fix them.
99
290589
2936
ஒரு படி மேலே போய் அதைச் சரி செய்ய முயல வேண்டும்
04:55
See this, this person,
100
295276
1566
இந்த நபரைப் பாருங்கள்
04:56
this is Mary Anderson.
101
296842
1469
இவர் பெயர் மேரி ஆண்டர்ஸன்
04:58
In 1902 in New York City,
102
298581
2197
1902 ல் நியூ யார்க் நகரத்தில்
05:00
she was visiting.
103
300778
1828
காரில் சென்று கொண்டிருந்தார்.
05:03
It was a cold, wet, snowy day and she was warm inside a streetcar.
104
303016
4818
அன்று மழையும் பனியுமாகக் குளிரான நாள் அவர் காரினுள்ளே சுகமாக இருந்தார்
05:09
As she was going to her destination, she noticed the driver opening the window
105
309226
5097
காரில் சென்று கொண்டிருந்த போது , டிரைவர் அடிக்கடி ஜன்னலைத் திறப்பதைப் பார்த்தார்
05:14
to clean off the excess snow so he could drive safely.
106
314323
4805
அது காரைப் பாதுகாப்பாகச் செலுத்த அதிகமான வெண்பனியைத் துடைப்பதற்காக.
05:20
When he opened the window, though, he let all this cold, wet air inside,
107
320258
3576
ஆனால் ஜன்னலைத் திறக்கும் போது எல்லாக் குளிர் மழையும் உள்ளே வந்தது
05:23
making all the passengers miserable.
108
323834
1945
பயணிகளை குளிர் நடுக்கியது
05:27
Now probably, most of those passengers just thought,
109
327189
2933
எல்லாப் பயணிகளும் என்ன நினைத்திருப்பார்கள்?
05:30
"It's a fact of life, he's got to open the window to clean it.
110
330122
3251
" அவர் என்ன செய்ய முடியும்? ஜன்னலைத் திறந்து தானே ஆக வேண்டும்!
05:33
That's just how it is."
111
333373
1393
அப்படித்தான் இருக்கும்."
05:35
But Mary didn't.
112
335176
1535
ஆனால் மேரி அப்படி இருக்கவில்லை.
05:36
Mary thought,
113
336711
1299
அவள் எண்ணினாள்
05:38
"What if the diver could actually clean the windshield from the inside
114
338010
3834
டிரைவரால் ஜன்னலை உள்ளிலிருந்து சுத்தம் செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்?
05:41
so that he could stay safe and drive
115
341844
3278
அப்பொழுது பாதுகாப்பாக காரை ஓட்டலாமே!
05:45
and the passengers could actually stay warm?"
116
345122
2941
பயணிகளும் சுகமாக இருக்கலாமே.
05:48
So she picked up her sketchbook right then and there,
117
348603
2752
அவள் அங்கேயே தன் வரைப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாள்
05:51
and began drawing what would become the world's first windshield wiper.
118
351355
4361
கார்க் கண்ணாடியின் துடைப்பானை வரைந்தாள் இதுவே உலகின் முதல் கார்க் கண்ணாடி "வைபர்"
05:56
Now as a product designer, I try to learn from people like Mary
119
356924
4270
பொருள் வடிவமைப்பாளராக நான் மேரி போன்றவர்களிடமிருந்து கற்கிறேன்
06:01
to try to see the world the way it really is,
120
361198
2765
உலகம் எப்படி இருக்கிறதோ அப்படி அதைப் பார்க்க முயலுகிறேன்
06:03
not the way we think it is.
121
363973
2074
நாம் எப்படி எண்ணுகிறோமோ அப்படி அல்ல
06:06
Why?
122
366587
947
ஏன்?
06:07
Because it's easy to solve a problem that almost everyone sees.
123
367534
3347
ஏனெனில் தென்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது எல்லோருக்கும் சுலபம்.
06:11
But it's hard to solve a problem that almost no one sees.
124
371894
3780
ஆனால் ஒருவருக்கும் தென்படாதவைகளுக்குத் தீர்வு காண்பது மிகக் கடினம்
06:16
Now some people think you're born with this ability
125
376441
2728
இத்திறைமை பிறக்கும்போதே வருகிறது என்று சிலருடைய எண்ணம்.
06:19
or you're not,
126
379169
1581
ஆனால் அது அப்படி இல்லை
06:20
as if Mary Anderson was hardwired at birth to see the world more clearly.
127
380750
4943
ஒருகால் மேரி ஆண்டர்ஸன் அப்படி இருந்திருக்கலாம்.
06:26
That wasn't the case for me.
128
386883
1930
ஆனால் நான் அப்படி இல்லை
06:28
I had to work at it.
129
388813
1643
அதற்காக பாடுபட வேண்டியிருந்தது
06:31
During my years at Apple,
130
391766
2629
நான் "Apple" ளில் பணி புரிகையில்
06:34
Steve Jobs challenged us to come into work every day,
131
394395
4747
ஒவ்வொரு நாளும் பணிக்கு வரும்போது ஸ்டீவ் ஜாப்ஸ் எங்களுக்கு சவால் விடுவார்.
06:39
to see our products through the eyes of the customer,
132
399142
3914
எங்கள் பொருள்களை கஸ்டமர்கள் கண்ணோட்டத்தில் காண வேண்டுமென்று
06:43
the new customer,
133
403056
1447
அதாவது புதிய கஸ்டமர்கள்
06:44
the one that has fears and possible frustrations
134
404503
3186
சந்தேகம் மற்றும் ஏமாறும் பயமும் உள்ள கஸ்டமர்களின் கண்ணோட்டத்தில்.
06:47
and hopeful exhilaration that their new technology product
135
407689
3141
அவர்கள் நவீன நுட்பப் பொருளை ஆர்வத்துடன் எதிர்பார்ப்பவர்கள்
06:50
could work straightaway for them.
136
410830
2021
அது உடனடியாக பயன்படுமென நம்புபவர்கள்.
06:53
He called it staying beginners,
137
413471
2234
அவர் அதை "என்றும் கற்பவர்களாக நிற்பது" என்றார்
06:55
and wanted to make sure that we focused on those tiny little details
138
415705
3982
நாங்கள் சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவதை உறுதிப் படுத்தினார்.
06:59
to make them faster, easier and seamless for the new customers.
139
419687
4158
புது கஸ்டமருக்காக அவைகளை சுலபம், வேகம் மற்றும் தொடர்ச்சியோடு உருவாக்க சொன்னார்
07:04
So I remember this clearly in the very earliest days of the iPod.
140
424558
4247
இது IPOD ன் மிக ஆரம்ப நாட்களிலிலானதால். எனக்கு தெளிவாக நினைவிலிருக்கிறது
07:09
See, back in the '90s,
141
429028
1670
இங்கே பாருங்கள் - 1990 களில்
07:10
being a gadget freak like I am,
142
430698
2429
நுட்பக் கருவிகளில் நான் பயித்தியமாக இருந்தவன்
07:15
I would rush out to the store for the very, very latest gadget.
143
435107
4895
அதி நவீன நுட்பக் கருவியொன்று வெளியானவுடன் அதை வாங்க கடைக்கு விரைவேன்
07:21
I'd take all the time to get to the store,
144
441291
2062
எவ்வளவு சிரமமானாலும் கடைக்கு செல்வேன்
07:23
I'd check out, I'd come back home, I'd start to unbox it.
145
443353
3611
வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வருவேன். உடனே அதைத் திறந்து பார்ப்பேன்
07:26
And then, there was another little sticker:
146
446964
3926
அதன் உள்ளே ஒரு சிறிய ஸ்டிக்கர் இருக்கும்
07:30
the one that said, "Charge before use."
147
450890
3115
"உபயோகிக்கு முன் சார்ஜ் செய்யவும்" என்று
07:34
What!
148
454005
1548
ஐயகோ ,
07:35
I can't believe it!
149
455553
1005
எனக்குள்ளே ஏமாற்றம்
07:36
I just spent all this time buying this product
150
456558
2176
பொருளை வாங்க நான் செலவழித்த நேரம் !
07:38
and now I have to charge before use.
151
458734
2034
உபயோகிக்கு முன் சார்ஜ் செய்ய வேண்டுமாம் !
07:40
I have to wait what felt like an eternity to use that coveted new toy.
152
460768
4390
புதிய பொம்மையை இயக்க ஒரு யுகம் காத்திருக்க வேண்டும்
07:45
It was crazy.
153
465158
1692
கிறுக்குத்தனமாக இருந்தது.
07:46
But you know what?
154
466850
905
ஆனால் என்ன?
07:47
Almost every product back then did that.
155
467755
2083
அப்போ எல்லாப் பொருள்களுமே அப்படித் தான்
07:49
When it had batteries in it,
156
469838
1775
அதில் பாட்டரி இருந்தால் நீங்கள்
07:51
you had to charge it before you used it.
157
471613
2277
உபயோகிக்கு முன் அதை சார்ஜ் செய்ய வேண்டும்.
07:54
Well, Steve noticed that
158
474690
2446
ஸ்டீவ் அதைக் கவனித்தார்
07:57
and he said,
159
477136
831
07:57
"We're not going to let that happen to our product."
160
477967
2598
பிறகு கூறினார்
"நம்முடைய பொருள்களுக்கு அவ்வாறு நடக்க விட மாட்டோம்."
08:00
So what did we do?
161
480565
1848
ஆக, நாங்கள் என்ன செய்தோம்?
08:02
Typically, when you have a product that has a hard drive in it,
162
482413
3086
சாதாரணமாக "ஹார்ட் டிரைவ்" உள்ள பொருளாக இருந்தால்
08:05
you run it for about 30 minutes in the factory
163
485499
2663
தொழிற்சாலையில் அதை 30 நி. ஓட்டிப் பார்ப்பீர்கள்
08:08
to make sure that hard drive's going to be working years later
164
488162
3149
அந்த ஹார்ட் டிரைவ் பல வருடங்கள் ஓடுமென்பதை உறுதிப் படுத்திக் கொள்ள.
08:11
for the customer after they pull it out of the box.
165
491311
3074
அதை உபயோகிக்கப் போகும் கஸ்டமர்களுக்காக இதைச் செய்கிறோம்
08:14
What did we do instead?
166
494385
3066
ஆனால் அதற்குப் பதிலாக நாங்கள் என்ன செய்தோம்?
08:17
We ran that product for over two hours.
167
497451
2090
அதை 2 மணி நேரத்திற்கும் மேலாக ஓட்டினோம்
08:19
Why?
168
499541
1588
ஏன்?
08:21
Well, first off, we could make a higher quality product,
169
501129
3125
முதலில் எங்களால் மேலும் தரமுள்ள பொருள்களைத் தயாரிக்க முடிந்தது
08:24
be easy to test,
170
504254
2150
சுலபமாக சோத்தித்துப் பார்க்க முடிதது.
08:26
and make sure it was great for the customer.
171
506404
2942
கஸ்டமர்கள் அதை விரும்புவதை உறுதிப் படுத்திக் கொள்ள முடிந்தது
08:29
But most importantly,
172
509906
1253
ஆனால் அதை விட முக்கியமாக
08:31
the battery came fully charged right out of the box,
173
511159
3019
பெட்டியிலிருந்து எடுக்கும் போதே பாட்டரி முழு சார்ஜுடன் இருந்தது.
08:34
ready to use.
174
514178
946
பயன்படுத்த தயாராக.
08:35
So that customer, with all that exhilaration,
175
515124
3832
ஆவலுடன் பொருளை வாங்கிய அந்தக் கஸ்டமர்
08:38
could just start using the product.
176
518956
1728
உடனே பொருளைப் பயன்படுத்த தொடங்கலாம்.
08:40
It was great, and it worked.
177
520684
2390
அத சிறப்பாக, பயனுள்ளதாக இருந்தது.
08:43
People liked it.
178
523074
1264
மக்களுக்கு பிடித்திருந்தது
08:44
Today, almost every product that you get that's battery powered
179
524338
3107
இன்று கிட்டத்தட்ட பாட்டரியில் வேலை செய்யும் எல்லாப் பொருள்களும்
08:47
comes out of the box fully charged,
180
527445
2063
முழு சார்ஜுடன் வெளி வருகிறது
08:49
even if it doesn't have a hard drive.
181
529508
2053
ஹார்ட் டிரைவ் இல்லாவிட்டாலும் கூட.
08:52
But back then, we noticed that detail and we fixed it,
182
532131
4774
ஆனால் அப்பொழுதே நாங்கள் அதை கவனித்து அதற்குத் தீர்வும் கண்டோம்.
08:56
and now everyone else does that as well.
183
536905
2348
இ ப்பொழுது எல்லோருமே அதைச் செய்கிறார்கள்.
08:59
No more, "Charge before use."
184
539253
2641
இனிமேல் "உபயோகிக்கு முன் சார்ஜ்" என்பது கிடையாது
09:02
So why am I telling you this?
185
542644
2057
நான் இதையெல்லாம் ஏன் உங்களிடம் சொல்கிறேன்?
09:04
Well, it's seeing the invisible problem,
186
544701
2108
தென்படாத பிரச்சினைகளத் தேட வேண்டுமென்பதற்காக.
09:06
not just the obvious problem, that's important,
187
546809
4511
தெள்ளத் தெரியும் பிரச்சினைகளை மட்டுமல்ல இது மிக முக்கியம்
09:11
not just for product design, but for everything we do.
188
551320
2840
பொருள்களின் டிஸைனில் மட்டுமல்ல செய்யும் எல்லா விஷயங்களிலும்
09:14
You see, there are invisible problems all around us,
189
554682
3524
இங்கே பாருங்கள், நம்மைச் சுற்றி தென்படாத பல பிரச்சினைகள் உள்ளன
09:18
ones we can solve.
190
558206
2256
நாம் தீர்வு காணக் கூடியவைகள்
09:20
But first we need to see them, to feel them.
191
560462
3824
ஆனால் அவைகளை நாம் முதலில் காண வேண்டும், பிறகு உணர வேண்டும்
09:24
So, I'm hesitant to give you any tips
192
564996
1968
உங்களுக்கு ஆலோசனைகள் தர சற்று தயங்குகிறேன்
09:26
about neuroscience or psychology.
193
566964
2731
நரம்பு விஞ்ஞானம் அல்லது மனவியல் பற்றி.
09:29
There's far too many experienced people in the TED community
194
569695
2994
TED சமூகத்தில் மிக்க அனுபவமுள்ள பலர் இருக்கிறார்கள்
09:32
who would know much more about that than I ever will.
195
572689
3394
நான் ஒரு காலத்திலும் அறிய முடியாத பல விஷயங்கள் அவர்களுக்கு தெரியும்
09:36
But let me leave you with a few tips that I do,
196
576083
2627
ஆனால் நான் செய்யும் சிலவற்றை உங்களுக்கு சொல்கிறேன்
09:38
that we all can do, to fight habituation.
197
578710
3673
பழகிப் போவதை எதிர் கொள்ள நாம் எல்லோருமே இதைச் செய்யலாம்
09:42
My first tip is to look broader.
198
582383
3394
முதல் யோசனை: உங்கள் பார்வை பரவலாக இருக்க வேண்டும்.
09:45
You see, when you're tackling a problem,
199
585777
2112
நீங்கள் ஒரு பிரச்சினைக் கையாளும்போது
09:47
sometimes, there are a lot of steps that lead up to that problem.
200
587889
3392
அந்தப் பிரச்சினை ஏற்பட்டதற்கு பல காரணங்கள் இருக்கலாம்
09:51
And sometimes, a lot of steps after it.
201
591281
3070
சில சமயங்களில் , பிரச்சினைக்குப் பின்பும் பல படிகள் இருக்கும்
09:54
If you can take a step back and look broader,
202
594351
3349
நீங்ககள் சற்றுப் பின் தள்ளி நின்று பரந்த பார்வையோடு காணும்போது
09:57
maybe you can change some of those boxes
203
597700
2271
ஒருகால் சில மாற்றங்கள் செய்ய முடியலாம்
09:59
before the problem.
204
599971
1006
பிரச்சினை வரு முன்
10:00
Maybe you can combine them.
205
600977
1360
ஒருகால் அவைகளை இணைக்கலாம்
10:02
Maybe you can remove them altogether to make that better.
206
602337
3335
ஒருகால் அவைகளை மொத்தமாக அகற்றி அதை மேம்படுத்தலாம்
10:06
Take thermostats, for instance.
207
606258
1991
உதாரணம் - வெப்ப- மானியை எடுதது கொள்ளுங்கள்
10:08
In the 1900s when they first came out, they were really simple to use.
208
608249
3378
1900 களில் அவைகள் முதலில் வெளி வந்த போது உபயோகிப்பது சுலபமாக இருந்தது
10:11
You could turn them up or turn them down.
209
611627
1952
அவைகளை கூட்டலாம் அல்லது குறைக்கலாம்
10:13
People understood them.
210
613579
1700
மக்கள் அதைப் புரிந்து கொண்டார்கள்
10:16
But in the 1970s,
211
616019
1753
ஆனால் 1970 களில்
10:17
the energy crisis struck,
212
617772
2074
மின்சக்தி தட்டுப்பாடு தாக்கிய போது
10:19
and customers started thinking about how to save energy.
213
619846
3570
மின்சக்தியைச் சேமிப்பது பற்றி கஸ்டமர்கள் நினைக்க ஆரம்பித்தார்கள்.
10:23
So what happened?
214
623416
1287
ஆகையால் என்ன நடந்தது?
10:24
Thermostat designers decided to add a new step.
215
624703
3028
வெப்ப - மானி டிஸைனர்கள் மானியில் ஒரு புதிய அம்சம் சேர்த்தார்கள்
10:27
Instead of just turning up and down,
216
627731
1850
மானியை கூட்டிக் குறைப்பதற்குப் பதிலாக
10:29
you now had to program it.
217
629581
1991
நீங்கள் அளவை நிர்ணயித்துக் கொள்ளலாம்
10:31
So you could tell it the temperature you wanted at a certain time.
218
631572
3218
எந்த நேரத்திற்கு எந்த வெப்ப நிலை வேண்டுமோ அதன் படி.
10:34
Now that seemed great.
219
634790
1796
நல்ல அம்சமாகத் தோன்றுகிறதல்லவா?
10:36
Every thermostat had started adding that feature.
220
636586
3478
ஒவ்வொரு வெப்ப மானியும் இந்த அம்சத்தை சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தது.
10:40
But it turned out that no one saved any energy.
221
640064
4276
ஆனால் எவரும் மின்சக்தியை மிச்சப்படுத்தியதாகத் தெரியவில்லை
10:44
Now, why is that?
222
644340
1513
ஏன் அப்படி?
10:45
Well, people couldn't predict the future.
223
645853
2735
ஏனெனில் மக்களால் வருங்காலத்தைக் கணிக்க முடியவில்லை
10:48
They just didn't know how their weeks would change season to season,
224
648588
3548
ஒவ்வொரு பருவத்திலும் என்ன மாற்றங்கள் நிகழுமென்று அவர்களுக்குத் தெரியவில்லை
10:52
year to year.
225
652136
1498
ஒரு வருடம் போல் மற்றது இல்லையே.
10:54
So no one was saving energy,
226
654414
2331
அதனால் ஒருவரும் மின்சக்தியை மிச்சப் படுத்தவில்லை
10:56
and what happened?
227
656745
982
பிறகு என்ன நடந்தது?
10:57
Thermostat designers went back to the drawing board
228
657727
2623
வெப்ப மானி டிஸைனர்கள் திரும்பினர் டிஸைன் பலகைக்கு
11:00
and they focused on that programming step.
229
660350
2042
அளவு நிர்ணயத்தை கவனத்துடன் ஆய்ந்தார்கள்
11:02
They made better U.I.s,
230
662942
2467
நுகர்வோருடன் தொடர்பை மேம்படுத்தினார்கள்
11:05
they made better documentation.
231
665409
2166
ஆவணத் தயாரிப்பை மேம்படுத்தினார்கள்
11:07
But still, years later, people were not saving any energy
232
667575
4730
இருந்தாலும் , பல வருடங்கள் பொறுத்தும் மக்களால் மின்சக்தி சேமிக்க முடியவில்லை
11:12
because they just couldn't predict the future.
233
672305
2596
ஏனெனில் அவர்களால் பருவ மாற்றங்களைக் கணிக்க முடியவில்லை
11:15
So what did we do?
234
675431
1478
ஆகையால் நாங்கள் என்ன செய்தோம்?
11:16
We put a machine-learning algorithm in instead of the programming
235
676909
4069
திட்டமிடுவதற்கு பதிலாக இயந்திரமே கற்றுக் கொள்ளும் படிமுறையை அமைத்தோம்
11:20
that would simply watch when you turned it up and down,
236
680978
2698
மானியை கூட்டி குறைக்கையில் இயந்திரம் குறித்துக் கொள்ளும்.
11:23
when you liked a certain temperature when you got up,
237
683676
2594
நீங்கள் விழித்தெழும்போது விரும்பும் வெப்ப நிலை என்ன?
11:26
or when you went away.
238
686270
1707
வெளியே செல்கையில் விரும்புவது எது?
11:27
And you know what?
239
687977
1268
என்ன நடந்தது தெரியுமா?
11:29
It worked.
240
689245
927
அது பயனளித்தது.
11:30
People are saving energy without any programming.
241
690422
3217
திட்டமிடாமலேயே மக்கள் மின்சக்தியை சேமித்துக் கொண்டிருக்கிறார்கள்.
11:35
So, it doesn't matter what you're doing.
242
695239
2007
உங்கள் பணி என்ன என்பது ஒரு பொருட்டேயல்ல.
11:37
If you take a step back and look at all the boxes,
243
697246
3266
நீங்கள் சற்று பின் தள்ளி நின்று எல்லாப் பிரச்சினைகளையும் கவனித்தால்
11:40
maybe there's a way to remove one or combine them
244
700512
3021
அவைகளை தவிர்ப்பதற்கோ அல்லது மாற்றி அமைப்பதற்கோ வழி தென்படலாம்
11:43
so that you can make that process much simpler.
245
703533
2514
உங்களால் செய்முறையை எளிதாக்க முடியலாம்.
11:47
So that's my first tip: look broader.
246
707007
3077
ஆகையால் என் முதல் ஆலோசனை: அகன்று பாருங்கள்.
11:50
For my second tip, it's to look closer.
247
710084
3981
இரண்டாவது : நெருங்கி நின்று பாருங்கள்
11:54
One of my greatest teachers was my grandfather.
248
714065
3031
என் மேன்மையான ஆசான்களில் ஒருவர் என் தாத்தா
11:59
He taught me all about the world.
249
719006
1901
உலகம் பற்றி அனைத்தையும் கற்பித்தார்
12:01
He taught me how things were built and how they were repaired,
250
721557
3492
பொருள்கள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன, எப்படி பழுது பார்க்கப்படுகின்றன,
12:05
the tools and techniques necessary to make a successful project.
251
725049
3722
ஒரு செயல் திட்டத்தை வெற்றிகரமாக்க தேவையான கருவிகள் மற்றும் நுட்பங்கள்.
12:09
I remember one story he told me about screws,
252
729671
4337
மறையாணிகள் பற்றி அவர் சொல்லிய ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது
12:14
and about how you need to have the right screw for the right job.
253
734048
3630
ஒவ்வொரு பணிக்கும் சரியான மறையாணி தேர்ந்தெடுப்பதின் அவசியத்தை பற்றி கூறினார்
12:17
There are many different screws:
254
737678
1939
மறையாணிகளில் பல வகைகள் உள்ளன.
12:19
wood screws, metal screws, anchors, concrete screws,
255
739617
4870
மரத்திற்கு, உலோகத்திற்கு, ஆதாரத்திற்கு கற்காரைக்கு என்று வேறு வேறு மறையாணிகள்
12:24
the list went on and on.
256
744487
1745
பட்டியல் நீண்டு கொண்டேபோயிற்று
12:27
Our job is to make products that are easy to install
257
747212
3273
பொருள்களை சுலபமாகப் பொருத்தும் வகையில் தயாரிப்பதே நம் பணி
12:30
for all of our customs themselves without professionals.
258
750485
3734
நம் கஸ்டமர்கள் அனைவரும் அவர்களாகவே நிபுணர்களின் உதவியில்லாமல் செய்ய வேண்டும்
12:34
So what did we do?
259
754789
1421
அதற்கு நாங்கள் என்ன செய்தோம்?
12:36
I remembered that story that my grandfather told me,
260
756720
2935
அன்று என் தாத்தா சொன்ன கதை என் ஞாபகத்திற்கு வந்தது
12:39
and so we thought,
261
759655
1273
நாங்கள் சிந்தித்தோம்
12:40
"How many different screws can we put in the box?
262
760928
2500
" பெட்டியில் எவ்வளவு விதமான மறையாணிகளை வைப்பது""
12:43
Was it going to be two, three, four, five?
263
763428
2850
இரண்டா, மூன்றா, நான்கா, ஐந்தா
12:46
Because there's so many different wall types."
264
766278
2296
சுவர்களிலும் பற்பல வகைகள் இருக்கின்றனவே?"
12:48
So we thought about it, we optimized it,
265
768574
2730
ஆகையால் அது பற்றி சிந்த்தித்து உகப்பான தேர்வு செய்தோம்,
12:51
and we came up with three different screws to put in the box.
266
771304
4091
பெட்டியில் போட நாங்கள் முடிவு செய்தது மூன்று விதமான மறையாணிகள்
12:55
We thought that was going to solve the problem.
267
775845
2277
இந்தப் பிரச்சினைக்கு இதுவே தீர்வு என நினைத்தோம்
12:58
But it turned out, it didn't.
268
778122
2695
ஆனால் இல்லையென்று தெரிய வந்தது
13:01
So we shipped the product,
269
781527
1631
நாங்கள் பொருள்களை அனுப்பினோம்
13:03
and people weren't having a great experience.
270
783158
2390
கஸ்டமர்களுக்கு சிறந்த அனுபவம் கிட்டவில்லை
13:06
So what did we do?
271
786128
1208
ஆகையால் என்ன செய்தோம்?
13:07
We went back to the drawing board
272
787336
1745
திரும்பவும் வரைப் பலகைக்கு சென்றோம்
13:09
just instantly after we figured out we didn't get it right.
273
789081
3464
நாங்கள் செய்தது சரியில்லை என்று தெரிந்த உடனேயே.
13:12
And we designed a special screw, a custom screw,
274
792545
3724
முடிவில் ஒரு விசேஷமான மறையாணியை வடிவமைத்தோம்
13:16
much to the chagrin of our investors.
275
796269
2171
எங்கள் முதலீட்டாளர்களுக்கு ஒரே கோபம்
13:18
They were like, "Why are you spending so much time on a little screw?
276
798440
3422
"நீங்கள் ஒரு சிறிய ஸ்கூருவுக்காக ஏன் இவ்வளவு நேரம் வீணடிக்கிறீர்கள்.
13:21
Get out there and sell more!"
277
801862
1999
விற்பனையில் கவனம் செலுத்துங்கள்" என்றனர்
13:23
And we said, "We will sell more if we get this right."
278
803861
3323
" இது சரியானால் விற்பனை அதிகமாகும்." என்று நாங்கள் சொன்னோம்.
13:27
And it turned out, we did.
279
807904
1690
அவ்வாறே நடக்கவும் செய்தது.
13:29
With that custom little screw, there was just one screw in the box,
280
809594
3294
அந்த சிறிய விசேஷ மறையாணியால் பெட்டியில் ஒரே ஒரு மறையாணி மட்டுமே,
13:32
that was easy to mount and put on the wall.
281
812888
3107
அதை சுலபமாகப் பொருத்தி சுவற்றில் மாட்டி விடலாம்
13:37
So if we focus on those tiny details, the ones we may not see
282
817525
6100
எனவே நமக்கு சட்டென்று புலப்படாத சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி
13:44
and we look at them as we say,
283
824404
1824
நான் சொன்னது போல் அதைக் காண்கிறோம்.
13:46
"Are those important
284
826228
1408
"இவைகள் முக்கியமானவைகளா?
13:47
or is that the way we've always done it?
285
827636
2800
இது போல் தான் எப்பொழுதும் செய்ய வேண்டுமா?
13:50
Maybe there's a way to get rid of those."
286
830436
2884
ஒருகால் இவைகளுக்கு வேறு தீர்வுகள் உள்ளனவா?
13:54
So my last piece of advice is to think younger.
287
834220
4619
என்னுடைய கடைசி ஆலோசனை: இளமையாக சிந்தியுங்கள்
14:00
Every day, I'm confronted with interesting questions from my three young kids.
288
840389
4156
என் மூன்று குழந்தைகளும் ஒவ்வொரு நாளும் சுவாரசியமான கேள்விகளைக் கேட்கின்றன.
14:04
They come up with questions like,
289
844545
1771
கேள்விகள் இது போன்றவைகளாக இருக்கும்.
14:06
"Why can't cars fly around traffic?"
290
846316
2908
"ஏன் கார்கள் சாலை மேலே பறக்கக் கூடாது?'
14:09
Or, "Why don't my shoelaces have Velcro instead?"
291
849644
3776
"என் ஷூக்களுக்கு நாடாவிற்கு பதிலாக ஏன் வெல்க்ரோ போடக் கூடாது?"
14:14
Sometimes, those questions are smart.
292
854490
1899
சில கேள்விகள் சுட்டியாகவே இருக்கும்
14:17
My son came to me the other day and I asked him,
293
857409
2538
அன்றொரு நாள் என் மகன் என்னருகில் வந்தபோது சொன்னேன்
14:19
"Go run out to the mailbox and check it."
294
859947
3176
"ஓடிப் போய் தபால் பெட்டியில் தபால் உள்ளனவா என்று பார்க்கிறாயா?"
14:23
He looked at me, puzzled, and said,
295
863123
3768
அவன் என்னை வினோதமாக பார்த்து சொன்னது:
14:27
"Why doesn't the mailbox just check itself and tell us when it has mail?" (Laughter)
296
867311
4914
" ஏன் தபால் பெட்டியே பார்த்துக் கொண்டு தபால் உள்ளதா என்று தெரிவிக்கக் கூடாது?"
14:32
I was like, "That's a pretty good question."
297
872225
3653
நான் திகைத்துப் போய் ," நல்ல கேள்வி தான் என்றேன்."
14:36
So, they can ask tons of questions
298
876878
2614
அவர்கள் டன் கணக்கில் கேள்விகள் கேட்கலாம்
14:39
and sometimes we find out we just don't have the right answers.
299
879492
4718
சில நேரங்களில் நம்மிடம் சரியான விடைகள் இல்லையென்று தெரிகிறது.
14:44
We say, "Son, that's just the way the world works."
300
884210
5807
நாம் சொல்கிறோம், " அது தான் உலகம். அப்படித்தான் மகனே". என்று
14:50
So the more we're exposed to something,
301
890017
2550
நாம் எந்த அளவிற்கு விஷயங்களில் ஈடுபடுகிறோமோ
14:52
the more we get used to it.
302
892567
2197
அந்த அளவிற்கு அது நமக்கு பழகிப் போய் விடுகிறது
14:54
But kids haven't been around long enough
303
894764
2130
ஆனால் குழந்தைகள் அவ்வளவு நாட்கள் இல்லாததால்
14:56
to get used to those things.
304
896894
1900
விஷயங்கள் பழகிப் போவதில்லை
14:58
And so when they run into problems,
305
898794
1817
ஆகையால் பிரச்சினைகள் வரும்போது
15:00
they immediately try to solve them,
306
900611
2223
உடனே தீர்வுக்கு விழைகிறார்கள்
15:02
and sometimes they find a better way,
307
902834
2742
சில சமயங்களில் சிறந்த தீர்வுகளும் காண்கிறார்கள்
15:05
and that way really is better.
308
905576
2704
உண்மையாகவே சிறந்த தீர்வுகள்
15:08
So my advice that we take to heart is to have young people on your team,
309
908280
5839
ஆகையால் என் இதய பூர்வமான ஆலோனை: உங்கள் குழுவில் இளம் நபர்கள் இருக்கட்டும்
15:14
or people with young minds.
310
914119
2106
அல்லது இளமையான மனதுடையவர்கள்
15:16
Because if you have those young minds,
311
916225
2351
ஏனெனில் அந்த இளம் மனதுகள் இருந்தால்
15:18
they cause everyone in the room to think younger.
312
918576
3160
அறையிலுள்ள எல்லோரையும் இளமையாகச் சிந்திக்கச் செய்வார்கள்
15:21
Picasso once said, "Every child is an artist.
313
921736
4364
பிகாஸோ ஒரு முறை கூறினாராம் : "ஒவ்வொரு குழந்தையும் ஒரு கலைஞன்.
15:27
The problem is when he or she grows up, is how to remain an artist."
314
927090
5316
ஆனால் அவனோ அவளோ வளர்ந்த பிறகு கலைஞனாக இருப்பது தான் பிரச்சினை."
15:33
We all saw the world more clearly when we saw it for the first time,
315
933785
3949
நாம் எல்லோரும் முதன் முதலில் உலகத்தை பார்க்கையில் அதை இன்னும் தெளிவாக கண்டோம்.
15:37
before a lifetime of habits got in the way.
316
937734
2574
அதாவது வாழ்க்கையின் பல பழக்கங்கள் குறுக்கிடும் முன்.
15:40
Our challenge is to get back there,
317
940998
2343
திரும்பவும் அங்கு செல்வதே நமக்கான சவால்
15:43
to feel that frustration,
318
943341
2245
அந்த பிரச்சினைகளை உணர்வது
15:45
to see those little details,
319
945586
2340
சின்ன விஷயங்களைக் கூட தீர்க்கமாக பார்ப்பது
15:47
to look broader,
320
947926
1740
அகலமாகப் பரந்த பார்வை பெறுவது
15:49
look closer,
321
949666
1756
கிட்ட இருந்து பார்ப்பது
15:51
and to think younger
322
951422
1670
இளமையாகச் சிந்திப்பது
15:53
so we can stay beginners.
323
953792
1918
நாம் என்றும் கற்பவர்களாகவே இருப்போம்
15:56
It's not easy.
324
956150
1223
அது சுலமல்ல
15:57
It requires us pushing back
325
957373
1535
அதற்காக பாடுபட வேண்டும்
15:58
against one of the most basic ways we make sense of the world.
326
958908
3201
உலகத்தை பார்க்கப் பழகிய விதத்திலிருந்து மாற்றிக் கொள்ள வேண்டும்
16:03
But if we do,
327
963689
1043
அப்படி நாம் செய்தால்
16:04
we could do some pretty amazing things.
328
964732
2511
நம்மால் சில ஆச்சரியமான விஷயங்களை செய்ய முடியும்
16:07
For me, hopefully, that's better product design.
329
967243
2647
எனக்கு அது பொருள்களின் மேம்பாடான வடிவமைப்பு
16:10
For you, that could mean something else, something powerful.
330
970940
4577
உங்களுக்கு அது வேறாக இருக்கலாம். சக்தி மிக்க ஏதோ ஒன்று
16:18
Our challenge is to wake up each day and say,
331
978105
3064
ஒவ்வொரு நாளும் எழும்போது நமக்கு விடுத்துக் கொள்ளும் சவால்
16:21
"How can I experience the world better?"
332
981169
3175
" இவ்வுலகை மேலும் சிறப்பாக எப்படி உணர்வேன்?
16:24
And if we do, maybe, just maybe,
333
984344
4849
அதைச் செய்தோமானால், ஒருகால்,,,,,,, ஒருகால்
16:29
we can get rid of these dumb little stickers.
334
989193
4195
அந்த மடத்தமான ஸ்டிக்கர்களை ஒழித்து விடலாம்.
16:34
Thank you very much.
335
994248
1549
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
16:35
(Applause)
336
995797
2477
(கர கோஷம்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7